தடுத்தாட்கொண்ட புராணம் 9.
குபேரன் அன்போடு காளாஞ்சி ஏந்த ஈசானன் இதுசரி என்று புன்முறுவல் செய்யப் பிரமன் முத விய வேத முனிவர்கள், மந்திரநீர் கொண்ட ருச்சித்துத் துதிக்க விண்ணுலகத் தமரர்கள் நறுமலர் துவச் சூரியனை மறைத்த கருமுகில்கள் மழைபெய்ய மனம்மகிழ்ந்து நவரத்தி னத்தால் செய்துஒளி மிகுந்த சிறுதேரை உருட்டியருள்க. அழகிய பழனியில் சிவகிரியில் வாழும் முருகையனே சிறுதேர் உருட்டியருள்க. ’’ (பழனிப் பிள்ளைத்தமிழ், 10:1), 'இசைக்குழலும் வீணையும் கஞ்சமும் பல்லியமும் எ ல்லாம் பயின்று பாடி ஏறுதக ரானைபரி தேருகைத்தும் கடல்கள் ஏழையும் துளியாக்கியே, வசைத்தொழில் அரக்கர்கள் துணுக்கென மலைத்தமரர் வஞ்சகம்இ தென்ற யிர்ப்ப வான வர்கள் தானவர்கள் செய்கையென் றேமதி மருண்டுளம் வெருண்டு சோர, மிசைப்படும் உடுக்கதிர் களைத்தலை மயக்கிமக மேருவை முறித்துழக்கி விண்டுவிண் டண்டம் குலுங்கநவ வீரர்கள் இலக்கர் சூழத் திசைக்கிரி அனைத்தை யும் உருட்டிவிளை யாடும்நீ சிறுதேர் உருட்டியருளே சிவ ஞான முத்திதரு திருமா மலைக்கடவுள் சிறுதேர் உருட்டி. யருளே. (திருமலை முருகன் பிள்ளைத் தமிழ், 10:1) என வருவனவற்றைக் காண்க.
பிறகு உள்ள 5-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
'நரசிங்க முனையர் என்ற திருநாமத்தைப் பெற்றவரும், திருமுனைப்பாடி நாட்டில் வாழ்பவரும், அந்த நாட்டை ஆட்சி புரிபவரும் ஆகிய அந்த அரசர் சுந்தரமூர்த்தி என்னும் ஆண்குழந்தையைப் பார்த்துப் புகழ்வதற்கு அருமையாக இருக்கும் வாத்ஸல்யம் மிகுதியாக உண்டாக, அந்த ஆண் குழந்தையைப் பெற்றவர்களாகிய சடையனார், இசைஞானி யார் என்பவர்களிடம் போய்க் கலந்திருக்கும் நட்பினால் அவர்களிடம் வேண்டிக் கொண்டு அந்த ஆண்குழந்தையைப் பெற்றுக் கொண்டு தங்களுடைய இளவரசனாகிய குமாரT