தடுத்தாட்கொண்ட புராணம் 171
“மன்றுள் ஆடும்மது வின்கசையாலே
மறைச்சு ரும்பறை புறத்தின் மருங்கே குன்று போலுமணி மாமதில் சூழும்
குண்ட கழ்க்கமல வண்டலர் கைதைத் துன்று நீறுபுனை ம்ேனிய வாகித்
தூய நீறுபுனை தொண்டர்கள் என்னச் சென்று சென்று முரல் கின்றன கண்டு
சிங்தை அன்பொடு திளைத்தெதிர் சென்றார்.' மன்றுள்-சிதம்பரத்தில் உள்ள திருக்கோயிலில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில். ஆடும்-திருநடனம் புரிந் தருளும், மதுவின்-தேனைப் போன்ற நடராஜப் பெருமா னிடம். நசையால்-கொண்ட விருப்பத்தால். ஏ:அ"ை நிலை. மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களாகிய, ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. சுரும்பு-வண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். அறை-சிங்காரம் செய்யும். புறத்தின்வெளியிடத்தின். மருங்கு-பக்கத்தில். ஏ:அசைநிலை. குன்று-மலையை. போலும்-போல விளங்கும். மா-உயர மான. மணி-மாணிக்கங்களைப் பதித்த ஒருமை பன்மை மயக்கம். ம தி ல் - திருமதில். சூழும்-சுற்றியிருக்கும். - குண்டு-ஆழமான அகழி-அகழியில். க்:சந்தி. கமலா தாமரை மலரில். வண்டு-வண்டுகள்; ஒருமை பன்ம்ை மயக்கம். அலர்-பர்வி மொய்க்கும். கைதை-தாழம்பூவில். த்: சந்தி. துன்று-பொருந்தியிருக்கும். நீறு-விபூதியைப் போன்ற மகரந்தப் பொடியை. புனை-பூசிக்கொண்ட, மேனியவாகி-உடம்புகளை உடையவை ஆகி. தூய-பரிசுத்த மாகிய, நீறு-விபூதியை. புனை-தங்கள் திருமேனிகளில் பூசிக் கொண்ட. த்ொண்டர்கள்-சிவபெருமானுடைய தொண்டர்கள். என்ன-என்று சொல்லும் வண்ணம். ச்: சந்தி. சென்று-பற்ந்து போய். சென்று-போய். முரல். கின்ற-முரல்கின்ற அந்த வண்டுகளை. கண்டு-பார்த்து.