பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 173 :வினையேன் மனத்தே ஊறு மட்டே.', தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து.', --தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்.”, * தெளிவந்த தேறலை.', '.ே த ைன ப் பழ ச் dr. Gð) Gll. ஆயி னானை.’’, ‘அடியோம் கண்ணகத்தே நின்று கனிதரு தேனே.', 'தேறலின் தெளிவே சிவபெரு மானே.”, நெல்லிக் கனியைத் தேனைப் பாலை.", கோற்றே னென்கோ குரைகடல்வாய் அமுதென்கோ.”, ’தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்.', 'அந்த இடைமருதில் ஆனந்தத் தேன்.இருந்த பொந்தை.’’ என்று மாணிக்க வாசகரும், அம்பலத்தே நின்று சூத்துகந்த தேனே.”, மாமருதிற் பெருந்தேன்.’’ என்று பட்டினத் துப் பிள்ளையாரும் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து உள்ள 97-ஆம் பாடலின் கருத்து வருமாறு: :இந்த உலகத்தில் வாழும் மக்கள் விளக்கத்தை அடை யும் வண்ணம் வளருகின்றன இருக்கு வேதம், யஜுர்வேதம்: &PIT ts) வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங் களை முறையாக அத்தியயனம் செய்து நிறை வேற்றிய வேதியர்கள் ஒதும் இனிய கானத்தைக் கேட்டுப் பழகிய நல்ல குணம் மிகுதியாக அமைய, வெண்மையான - துவசம் காற்றில் அசைந்து ஆடிக் கொண்டிருக்கும்; கீர்த்தி விளங்குகின்ற அடிக்கும் மணியின் நாக்கைக் கோயிலுக்கு வருகிற பக்தர்கள் அடித்து உண்டாக்கும் ஓசையாலும், - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் நான்கு திசை களும் வெளியில் அமைந்திருத்தலாலும் மாலை விளங்குகின்ற மலையைப் போன்ற மார்பைப் பெற்ற பிரமதேவனுடைய தங்க நிறத்தைக் கொண்ட நான்கு முகங்கள் என்று கூறும் வண்ணம் அமைந்த தில்லையாகிய சிதம்பரம் என்னும் சிவத் தலத்தில் திகழும் அழகிய வாசல்கள் நான்கினுக்குள் ஒன் றாகிய வடக்குத் திக்கில் உள்ள வாசலுக்கு முன்பு சுந்தர மூர்த்தி நாயனார் போய் அடைந்து. பாடல் வருமாறு: -