174 . பெரிய புராண விளக்கம்-2
பார்வி ளங்கவளர் நான்மறை நாதம் - பயின்ற பண்புமிக வெண்கொடி ஆடும்
சீர்வி ளங்குமணி நாஒலி யாலும்
திசைகள் கான்கெதிர் புறப்பட லாலும் தார்வி ளங்குவரை மார்பின் அயன்பொன்
சதுர்முகங்களென ஆயின தில்லை ஊர்வி ளங்கு திருவாயில்கள் நான்கின்
உத்தரத்திசை வாயில்முன் எய்தி." இந்தப் பாடல் குளகம், சிதம்பரத்திற்கும் பிரமதேவ னுக்கும் சிலேடை இது. சிதம்பரத்திற்கு ஏற்ற பொருள் வருமாறு: பார்- . உலகத்தில் வாழும் மக்கள் இட ஆகுபெயர். விளங்க விளக்கத்தை அடையும் வண்ண்ம். வளர்-வளரும். நான் மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம்: சாம வேதம், அதர்வண் வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறை வேற்றிய தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களும் அந்த வேதங்களை ஒதும் திணை மயக்கம். மறை:ஒருமை பன்மை மயக்கம். நாதம் இனிய கான்த்தை. பயின்றபக்தர்கள் கேட்டுப் பழகிய பண்பு- நல்ல இயல்பு. மிக-மிகுதியாக அமைப். வெண் கொடி- சிதம்பரத்தில் உள்ள் ஆலயத்தினுடைய கோபுரத்தின்மேல் கட்டியிருக்கும். வெண்மையான துவசம். ஆடும்.காற்றில் அசையும். ர்ே-திர்த்தி. விளங்கு திகழும்.மனி-கோயில் மணியினுடைய. நா-நாக்கை. ஒலிங்ாலும் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அடித்து எழுப்ப்ம் ஒசையினாலும், திசைகள் நான்கு-கிழக்கு, நிேதி வட்க்கு, தெற்கு என்னும் நான்கு திசைகளும் எதிர் -எதிர் எதிரே புறப்படலாலும்- வெளியே தோன்றுவ, தாலும்.
இனி, பிரமதேவனுக்கு ஏற்றபடி அமையும் பொருள் வருமாறு: - பார்-உலகம். விளங்க விளங்கும் ೧6ಕT65TLು. நான்மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம்,