†76 பெரிய புராண விளக்கம்-2
மேற்கு, வடக்கு, தெற்கு என்ற நான்கு திசைகளிலும். எதிர்-எதிரில். புறப்புடலாலும்-நான்கு முகங்கள் வெளிப் படுவதாலும். இதனால் பிரம தேவனுக்குத் திசைமுகன் என்ற பெயர் அமைந்தது: 'திசைமுகனும்.’’, திசை முகம் உடையானும்.’’ , திசைநான் முகன்.', 'திக்கமர் நான்முகன்." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயா ரும், திசைமுகனாய்.” என்று திருநாவுக்கரசு நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க. தார்-பூமாலை. விளங்குபொலியும். வரை-மலையைப் போன்ற, மார்பின்மார்பைப் பெற்ற அயன்-பிரமதேவனுடைய பொன்தங்க நிறத்தைப் பெற்ற பிரமதேவன் தங்க நிறத்தைப் பெற்ற திருமேனியை உடையவன்; இதனை, கனகம் அனையானும்.’’, செம்ப்ொனின் மேனியனாம் பிரமன்.'. பொன்னொப்பவனும்.', 'பொன்னிற நான்முகன்.' என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், "பொன் ஒத்த நிறத்தானும்.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும் பாடியருளியவற்றால் உணரலாம். சதுர்-தான்கு. முகங் கள் என-முகங்கள் என்று கூறும் வண்ணம். என:இடைக் குறை. ஆயின-அமைந்தனவாகிய, தில்லை-தில்லையாகிய சிதம்பரம் என்னும், ஊர்.சிவத்தலத்தில். விளங்குதிகழும். திரு-அழகிய, வாயில்கள்-வாசல்களாகிய நான்கு திக்குகள்; கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் நான்கு திசைகளிலும் உள்ள வாசல்கள். உத்தரத்திசைவடக்குத் திக்கில் உள்ள. வாயில்-வாசலுக்கு. முன்-முன் னால், எய்தி-சுந்தரமூர்த்திநாயனார் போய்ச்சேர்ந்து. மார் புக்கு மலை உவமை: பூண்டவ் வரைமார்பிற் புரிநூலன்." என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் பாடி யருளியதைக் காண்க..
பிறகு உள்ள 98-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
அன்போடு வந்து சுந்தரமூர்த்தி நாயனாரை எதிர் கொண்டு வரவேற்ற சிவனடியார்களோ அன்றி நம்பி ஆரூரர்