தடுத்தாட்கொண்ட புராணம் 17.9
வாரத்தை உண்டாக்கும்; இவ்வாறு பிறைச் சந்திரன் தங்குகின்ற சடாபாரத்தில் கங்கை யாறு அலைகளை வீசி ஒலிக்கும் தலையைப் பெற்ற தேவர்களுக்குத் தேவராகிய நடராஜப் பெருமானார் விரும்பி எழுந்தருளியதாகிய சிதம்பரத்தில் உள்ள தெருவில். பாடல் வருமாறு :
அங்கண் மாமறை முழங்கும்; மருங்கே
ஆட ரம்பையா அரங்கு முழங்கும்:
மங்குல் வானின்மிசை ஐந்தும் முழங்கும்: வாச மாலைகளில் வண்டு முழங்கும்:
பொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர் போற்றி சைக்கும்ஒலி எங்கும் முழங்கும்;
திங்கள் தங்குசடை கங்கை முழங்கும்
தேவ தேவர் புரியும் தருவீதி.'
அங்கண்-சிதம்பரத்தில் உள்ள அந்தத் திருவீதியில் ஒரு பக்கத்தில். மா-பெருமையைப் பெற்றவையாகிய, வினையாலணையும் பெயர். மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களும் ஒதும் அந்த வேதங்களின் கானம். மறை: ஒருமை பன்மை மயக்கம்; திணைமயக்கம். முழங்கும்முழக்கத்தைச் செய்யும். ஆடு-நடனம் ஆடும். அரம்பை யர்-அரம்பையைப் போன்ற அழகைப் பெற்ற பெண் மணிகள்; உவம ஆகுபெயர் ஒருமை பன்மை மயக்கம். அரங்கு - நடன சபையில் நடனம் புரியும் போது வாசிக்கப்படும் வாத்தியங்களும், பாடும் பாடல்களும், நடனமாடும் பெண்மணிகள் தங்களுடைய கால்களில் அணிந்திருத்த சிலம்புகள் முதலியவற்றின் ஆகுபெயர். முழங்கும்-ஓசையும் முழங்கும். மங்குல்-மேகங்கள் தவழும்;ஒருமை பன்மை மயக்கம். வானின்மிசை-ஆகாயத் தின்மேல். ஐந்தும்-நாகசுரம், ஒத்து, மத்தளம், கஞ்ச