180 பெரிய புராண விளக்கம்-2
தாளங்கள், உடல் என்னும் ஐந்து வாத்தியங்களும். முழங் கும்-பேரொலியை எழுப்பும். பொங்கும்-பொங்கிவரும். அன்பு-பக்தியினால், அருவி-மலையிலிருந்து குதிக்கும் அருவியைப் போல. கண்-பக்தர்களுடைய கண்கள்; ஒருமை பன்மை மயக்கம், பொழி-நீர்சொரியும். தொண் டர்-நடராஜப் பெருமானுடைய தொண்டர்கள்; ஒருமை பன்மை மயக்கம். போற்று-வாழ்த்துக்களை ஒருமை பன்மை மயக்கம். இசைக்கும்-பாடும். ஒலி-இனிய நாதம். எங்கும்-எந்த இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். முழங்கும்-முழக்கத்தை எழுப்பும். திங்கள்-பிறைச் சந்திரன். தங்கு-தங்கியிருக்கும். சடை-சடாபாரத்தை உடைய தலையில்; ஆகுபெயர். கங்கை-கங்கையாறு. முழங்கும்-அலைகளை வீசி ஒலிக்கும். தேவ தேவர்தேவர்கள் யாவருக்கும் முதல் தேவராகிய நடராஜப் பெருமானார். புரியும்-விரும்பி எழுந்தருளும். திருவீதிஅழகிய தெருவில் இத்தகைய நிகழ்ச்சிகள் நிகழும்.
தேவதேவர்: "தேவர்கள் தேவர் எம்பெரு மானார்.", “தேவர்கள் தேவரோ.", "தேவ தேவன் மன்னும் ஊர் திருந்து காழி." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், தேவாதி தேவர் என்னும் திருச்செம்பொன் பள்ளியாரே.", "தேவர்கள் தேவர் போலும்திருப்பயற் றுாரனாரே...' என்று திருநாவுக்கரசு நாயனாரும், "வானவர்க்கமுதைத் தேவ தேவனை.", "தேவ தேவனைத் தித்திக்கும் தேனை.' என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், "தேவர்கோ அறியாத தேவ தேவன்.', 'மெய்த் தேவர் தேவர்க்கே சென்று தாய் கோத்தும்.பீ.", சேட்டைத் தேவர்தம் தேவர் பிரானே.”, 'தேவர்தம் தேவே சிவபுரத் தரசே.', 'தேவ தேவன்மெய்ச் சேவகன்.", “தேவதேவன் திருப்பெய ராகவும்.’’ என்று மாணிக்க வாசகரும், 'தேவ தேவேசனே.”, 'தரித்திலர் தேவ தேவர்.', 'தேவ தேவனுமது திருவுள்ளம் செய்து., 'ஆதி தேவர்தம் திருவருட் பெருமை.', 'ஆதி தேவர் தம்