6) பெரிய புராண விளக்கம்-2
னுக்கு ஏற்றவாறு அன்போடு தம்முடைய புதல்வனாகும் பான்மையை மேற்கொண்டார். பாடல் வருமாறு: r
கரசிங்க முனையர் என்னும்
நாடுவாழ் அரசர் கண்டு
பரவரும் காதல் கூரப்
பயந்தவர் தம்பாற் சென்று
விரவிய நண்பி னாலே
வேண்டினர் பெற்றுத் தங்கள்
அரசிளங் குமரற் கேற்ப
அன்பினால் மகன்மை கொண்டார்.’’
நரசிங்கமுனையர் என்னும்-நரசிங்கமுனையர் என்று திருநாமம் கூறப்படும். நாடு-திருமுனைப்பாடி நாட்டில். வாழ்-வாழ்பவரும்; பெயரெச்ச வினையாலணையும் பெயர். அரசர்-அந்த நாட்டை ஆட்சி புரிபவரும் ஆகிய மன்னர். கண்டு-அந்த ஆண் குழந்தையைப் பார்த்து. பரவு அரும். புகழ்வதற்கு அருமையாக இருக்கும். காதல்-வாத்ஸல்யம். சுர-மிகுதியாக உண்டாக, ப்: சந்தி. பயந்தவர்தம்பர்ல்அந்த ஆண்குழந்தையைப் பெற்றவர்களாகிய சடையனா ரிடத்திலும் இசை ஞானியாரிடத்திலும். தம் : அசைநிலை. சென்று-போய், விரவிய-கல, துள்ள. நண்பினால்-நட் உால். ஏ:அசைநிலை. வேண்டினர்-வேண்டிக் கொண்டு; முற்றெச்சம். பெற்று-அந்த ஆண் குழந்தையை வாங்கிக் கொண்டு. த்:சந்தி. தங்கள்-தங்களுடைய பன்மை நர சிங்கமுனையரையரையும் அவருடைய மனைவியாரையும் சேர்த்து. அரசிளங்குமரற்கு-இளவரசனாகிய குமாரனுக்கு: அரசு:திணைமயக்கம். ஏற்ப-ஏற்றவாறு. அன்பினால்அன்போடு; உருபுமயக்கம். மகன்மை-தம்முடைய புதல்வ. ன்ாகும் தன்மையை. என்றது வளர்ப்புப் புதல்வனாக என்ற படி. கொண்டார்.மேற்கொண்டார்.
அடுத்து வரும் 6-ஆம் பாடலின் கருத்து வருமாறு: