182 பெரிய புராண விளக்கம்-2
அரசனாகிய குபேரன். மன்னும்-நிலைபெற்று வாழும். புரங்கள்-அனகாபுரி என்னும் நகரத்தையும் தேவலோகத் தில் இருக்கும் வேறு நகரங்களையும். ஒப்பன-ஒத்து விளங்குபவையாகிய, வரம்பில்-எல்லை இல்லாத, இலஇடைக்குறை. ஓங்கி-உயரமாக நின்று மாகம்-ஆகா யத்தை. முன்-முன்னால், ப ரு கு கி ன் ற ன-விழுங்கு கின்றவை. போலும்-போல விளங்கும். மாளிகை-திரு ம்ாளிகைகளின்; ஒருமை பன்மை மயக்கம், க்:சந்தி. குலம்-கூட்டத்தில், மிடைந்த-நெருங்கிப் பறக்கின்ற. பதாகை-பெரிய துவசங்கள்; ஒருமை பன்மை மயக்கம், யோக-யோகத்தைப் புரியும். சிந்தை - உள்ளங்களைக் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். மறையோர்கள்தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களும். வளர்க்கும் - வளர்த்து வரும். ஒம - ஹோமங்களில் எழும்; ஒருமை பன்மை மயக்கம் துாமம்-புகை. உயர் -உயரமாக விளங்கும் வானில்-ஆகாயத்தில் சென்று. அடுப்ப-சேர. மேக-மேகங்களினுடைய, ஒரு ைம பன்மை மயக்கம். பந்திகளின் - வரிசைகளினுடைய. மீது-மேலும். இடை-நடுவிலும். எங்கும்,- மற்ற இடங்கள் எல்லாவற்றிலும்; ஒருமை பன்மை மயக்கம்.
மின்-மின் ன ல் கள்; ஒருமை பன்மை மயக்கம். நுடங்குவன-அசைகின்றன; கால மயக்கம். என்னஎன்று கூறுமாறு. விளங்கும்-விளங்கிக் காட்சியை அளிக்கும்.
பிறகு உள்ள 101-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
'நடனம் ஆடுகின்ற மயில்கள் தங்களுடைய கலாபங் களை அடிக்கும் கோபுர வாசல் ஒவ்வொன்றிலும் ஆடிக் கொண் டி ரு க் கும்; தீக்கடைகோலினால் உண்டான நெருப்பு, தில்லை மூவாயிரம் அந்தணர்கள் புரியும் வேள் விகளில் கொடுக்கும் ஆகுதி ஒவ்வொன்றினாலும் எழும்; பக்கத்தில் அழகிய திருமாளிகைகளினுடைய வாசல் ஒவ்