தடுத்தாட்கொண்ட புராணம் 183.
வொன்றிலும் மாலைகள் தொங்கும்; வீடுகளில் உள்ள ஒவ்வொரு திண்ணையிலும் மங்கலமான பூரண கும் பத்தை வைத்திருப்பார்கள்; பெருமையைப் பெற்ற பிர காசம் தேர்களின் வரிசை ஒவ்வொன்றிலும் வீசும்; அன்ன சாலை ஒவ்வொன்றிலும் சம்பா நெற்களைக் குத்திய அரிசி களைச் சமைத்த சோறு மலையைப்போலக் காட்சியை அளிக்கும்; தண்ணீர்ப் பந்தல் ஒவ்வொன்றிலும் நெடு நாட்களாகச் சேமித்து வைத்திருக்கும் குளிர்ச்சியான நீரை நிரப்பி வைத்திருக்கும் பாத்திரங்களைக் காணலாம்: நீண்ட வீதிகளின் இடம் ஒவ்வொன்றிலும் வந்து கூடி நிரம்பிய தேவர்களின் கூட்டம் காணப்படும். பாடல் வருமாறு:
ஆடு தோகைபுடை நாசிகள் தோறும்:
அரணி தந்த சுடர் ஆகுதி தோறும்;
மாடு தாமமணி வாயில்கள் தோறும்;
மங்க லக்கலசம் வேதிகை தோறும்;
சேடு கொண்டஒளி தேர்நிரை தோறும்;
செந்நெல் அன்னமலை சாலைகள் தோறும்;
நீடு தண்புனல்கள் பக்தர்கள் தோறும்;
நிறைந்த தேவர்கணம் நீளிடை தோறும்.'
ஆடு-நடனம் ஆடுகின்ற.தோகை- மயில்கள் தங்களு டைய கலாபங்களை; ஒருமை பன்மை மயக்கம். புடைஅடிக்கும். நாசிகள்-கோபுர வாசல்கள். தோறும்-ஒல் வொன்றிலும் ஆடிக்கொண்டிருக்கும். அரணி-திக்கடை கோல். தந்த-உண்டாக்கிய சுடர்-நெருப்பு ஆகுதிதில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களும் புரியும் வேள்விகளில் கொடுக்கும் ஆகுதி. தோறும்-ஒவ்வொன் றிலும் எழும். மாடு-பக்கத்தில். மணி-அழகிய, வாயில் கள்-திருமாளிகைகளின் வாசல்கள். தோறும்-ஒவ்வொன் றிலும். தாமம்-மாலைகள் தொங்கும்; ஒருமை பன்மை, மயக்கம். வேதிகை-திருமாளிகைகளில் உள்ள திண்ணை.