丑54 பெரிய புராண விளக்கம்-2
தோறும்-ஒவ்வொன்றிலும். மங்கல-மங்கலமாகிய, க், சந்தி. கலசம்-பூரண கும்பத்தை வைத்திருப்பார்கள். சேடு-பெருமையை. கொண்ட-பெற்ற ஒளி-பிரகாசம். தேர்-தேர்களினுடைய; ஒருமை பன்மை மயக்கம். நிரை-வரிசை. தோறும்-ஒவ்வொன்றிலும் வீசும். சாலைகள்-வருகிறவர்களுக்கு விருந்துணவைப் படைக்கும் அறச் சாலைகள். தோறும்-ஒவ்வொன்றிலும். செந் நெல்-சம்பா நெற்களைக் குத்தி எடுத்த அரிசிகளைச் சமைத்த. அன்னம்-சோறு மலை-மலையைப் போலக் காட்சி அளிக்கும். பந்தர்கள்-தண்ணிர்ப் பந்தர்கள். தோறும்-ஒவ்வொன்றிலும். நீடு-நீண்டதினங்களாகச் சேமித்து வைத்திருக்கும். தண்-குளிர்ச்சியைப் பெற்ற. புனல்கள்-நீரை நிரப்பி வைத்திருக்கும் பாத்திரங்களை: ஆகுபெயர். காணலாம்' என்பதை வருவிக்க. நீள்-நீள மாக உள்ள இடை-வீதிகளின் இடம். தோறும்-ஒல் வொன்றிலும். நிறைந்த-தேவலோகத்திலிருந்து நட ராஜப் பெருமானைத் தரிசிப்பதற்காக வந்து நிரம்பிய, தேவர்-தேவர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம் கணம்-கூட்டம் காணப்படும்.
பிறகு உள்ள 102-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:
'கணக்கு இல்லாத பெரிய உலகங்கள் எல்லா வற்றிலும் இருக்கின்ற வரம்பு இல்லாத அழகுடைய பொருள்கள் என்று கூறப்பட்ட யாவும் மண்ணுலகத்தில் உள்ள இந்தச் சிவத்தலமாகிய சிதம்பரத்தில் வந்து சேர்ந்திருக்கின்றன என்று கூறும் வண்ணம் மங்கல காரியங்கள் விளங்குகின்ற வளத்தைப் பெற்றவையாக விளங்கிப் புண்ணியச் செயல்களைப் புரிந்தவர்களும் தூய பக்தர்களுமாகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாய னார், திருநாவுக்கரசு நாயனார், மாணிக்க வாசகர் மு. த லி ய வ ர் க ள் தன்னைப் புகழ்ந்து பாசுரங்களை விரும்பிப் பாடியருளிய சிறப்போடு விளங் கும் தலைவனாகிய, நடராஜப்பெருமான். திரு நடனம்