பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பெரிய புராண விளக்கம்-2

ஒருமை பன்மை மயக்கம். புரி-விரும்பிப் பாடியருளிய. பொற்பின்-சிறப்போடு. விளங்கும்-பொலியும். அண் ணல்-தலைவனாகிய நடராஜப் பெருமான். ஆடு-திரு நடனம் புரிந்தருளும், திரு-அழகிய அம்பலம்-திருச் சிற்றம்பலத்தை. சூழ்ந்த-சுற்றியுள்ள அம்-அழகிய. பொன்-தங்கத்தைப் பதித்த திருமாளிகைகள் உயரமாக நிற்கும்; ஆகு பெயர். வீதியினை-தெருவை. நம்பிஆளுடைய நம்பியாகிய சுந்தர மூர்த்தி நாயனார். வணங்கி-பணிந்து விட்டு,

சிதம்பரத்தைப் பற்றி, நட்டபாடை, காந்தார பஞ்சமம் என்னும் பண்களில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருப்பதிகங்களைப் பாடியருளியுள்ளார். அவற்றுள் நட்டபாடைப் பண்ணில் அமைந்த பாசுரம் ஒன்று வருமாறு:

"கற்றாங் கெரிஓம்பிக் கலியை வாராமே

செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலம்மேய முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே."

காந்தார பஞ்சமப் பண்ணில் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு:

'ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர்

அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம் - நாடி னாய் இடமாகநறுங் கொன்றை நயந்தவே பாடி னாய்மறை யோடுபல் கீதமும் பல்ச டைப்பனி கால்கதிர் வெண்டிங்கள். சூடி னாய்அருளாய் சுருங்களம் தொல்வினையே."

இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார்

கொல்லி என்னும் பண் அமைந்த ஒரு திருப்பதிகத்தை பும், திருவிருத்தம், திருக்குறுந்தொகை, பெரிய திருத்