தடுத்தாட்கொண்ட புராணம் 187
தாண்டகம், புக்க திருத்தாண்டகம் என்பவை அடங்கிய திருப்பதிகங்களையும் பாடியருளியுள்ளார். அவற்றுள் பெரிய திருத்தாண்டகம் ஒன்று வருமாறு:
'அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தம் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புவியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே."
இந்தத் தலத்தைப் பற்றிச் சுந்தர மூர்த்தி நாயனார் குறிஞ்சிப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:
பேராது காமத்திற் சென்றார்போல் அன்றியே
பிரியா துள்கிச் சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன் அடிவீழும்
திருவி னாரை - ஒராது தருமனார் தமர்செக்கில் இடும்போது
தடுத்தாட் கொள்வான் பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.” . -
இந்தத் தலத்தைப்பற்றி மாணிக்கவாசகர் பாடியருளி யவை வருமாறு:
'தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயிரெல்லாம் பயின்றனன் ஆகி."
தென்றில்லை மன்றினுள் ஆடி போற்றி.