தடுத்தாட்கொண்ட புராணம் 189
'வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டு கொண்ட அன்னம் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் பொன்னங் கழலுக்கே சென்று தாய் கோத்தும்பீ."
'பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாடோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட ஐயாஎன் ஆருயிரே அம்பலவா என்றவன்றன் செய்யார் மலரடிக்கே சென்று தாய் கோத்தும்.பீ.'
"புத்தன் புரந்தராதியர் அயன்மால் போற்றிசெயும்
பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த அத்தன் அணிதில்லை அம்பலவன் அருட்கழல்கள் சித்தம் புகுந்தவா தெள்ளேனம் கொட்டாமோ."
"குலம்பாடிக் கொக்கிறகும் பாடிக்கோல் வளையாள்
நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாடோறும் அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேனம் கொட்
டாமோ.'
'தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி பெண்பால் உகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ."
“தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடி தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம் ஊன்புக்க வேற்கானிக் கூட்டாம்காண் சாழலோ.'
'அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதிரியும்
நம்பனையும் தேவனென்று நண்னுமது என்னேடி நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா எம்பெருமான் ஈசாஎன் றேத்தினகாண் சாழலோ."