பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 11

'பெருமை மிகுதியாக அமைந்த நரசிங்க முனையரையர் என்னும் மன்னருடைய வாத்ஸல்யத்தைப் பெற்ற ஆண் குழந்தையாகிப் பிறகும் தங்களுடைய பரம்பரையில் தொன்று தொட்டு வரும் முறைப்படி அந்த அரச பரம்பரை யில் தங்கியிருந்து வளர்ச்சியை அடைந்து மங்கல காரியங் களைப் புரிவதற்குரிய வடிவத்தோடு பொருளை அறிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள வேத விதிப்படி மூன்று புரிகளைக் கொண்ட யூனுலை அணிந்து கொண்டு அளவு இல்லாத பழையவையாகிய அறுபத்து நான்கு கலைகளையும் ஆராய்ந்து தெரிந்து கொண்டு செல்வம் மிகுதியாக அமைந்த சிறப்போடு ஓங்கி வளர்ந்து சீர்த்தியைப் பெற்ற திருமணப் பருவத்தை அந்தச் சிறுவர் அடைந்தார். பாடல் வருமாறு: -

'பெருமைசால் அரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள் வருமுறை மரபின் வைகி வளர்ந்துமங் கலம்செய் கோலத் தருமறை முந்நூல் சாத்தி அளவில்தொல் கலைகள்

- ஆய்ந்து திருமலி சிறப்பின் ஓங்கிச் சீர்மணப் பருவம் சேர்ந்தார்.' பெருமை சால்-பெருமை மிகுதியாக அமைந்த. அரசர்நரசிங்கமுனையரையர் என்னும் திருநாமத்தைக் கொண்ட மன்னருடைய காதல்-வாத்ஸல்யத்தைப் பெற்ற பிள்ளை யாய்- ஆண்குழந்தையாகி. ப்: சந்தி. பின்னும்-பிறகும். தங்கள் -தங்களுடைய. வரு-தொன்றுதொட்டு வரும்" முறை-முறைப்படி. மரபில்-அரச பரம்பரையில். வைகிதங்கியிருந்து . வளர்ந்து-வளர்ச்சியை அடைந்து. மங்கலம்மங்கல காரியங்களை ஒருமை பன்மை மயக்கம். அந்தக் காரியங்களாவன: குடுமி வைத்தல், அன்னப் பிராசனம் செய்தல் முதலியவை. செய்-புரிவதற்குரிய கோலத்துவடிவத்தில். அரு-பொருளைத் தெரிந்து கொள்வதற்கு அருமையாகிய, மறை-வேதவிதிப்படி. முந்நூல்-மூன்று புரிகளைக்கொண்ட பூணுரலை. சாத்தி-அணிந்துகொண்டு.