12 பெரிய புராண விளக்கம்-2
உபநயனம் செய்யப் பெற்றுக் காயத்திரி மந்திரத்தை ஜபிக் கும் தகுதியைப் பெற்று என்றவாறு. அளவு இல்-கணக்கு இல்லாத. இல்: கடைக்குறை. தொல்-பழமையான, கலைகள்-அறுபத்து நான்கு கலைகளை அவை இன்ன என்பதை வேறோரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டு ணர்க. ஆய்ந்து-ஆராய்ச்சி செய்து கற்றுத் தேர்ச்சியை அடைந்து. திரு-அரசச் செல்வம். மலி-மிகுதியாக உள்ள. சிறப்பின்-சிறப்போடு. ஒ ங் கி-ஓ ங் கி வ ள ர் ந் து. ச்: சந்தி. சீ ர்-சீ ர் த் தி ைய ப் .ெ ப ற் ற. LO 6ඨි?-- தி ரு ம ன ம் புரி வ தற்கு சி ய. ப் : ச ந் தி. பருவம்-பருவத்தை சேர்ந்தார்.அந்த இளைஞர் அடைந் தார். - -
பிறகு உள்ள 7-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'அந்த இளைஞருடைய தகப்பனாராகிய சடையனார் தம்முடைய ஒப்பற்ற அழகிய புதல்வனுக்குச் சைவசமயத் தைச் சார்ந்த ஒரு வேதியருடைய குடும்பத்தில் தங்களு டைய அருமையும் பெருமையும் கொண்ட பரம்பரைக்கு ஏற்றவாறு தொன்று தொட்டு வந்த சிறப்போடு புத்துளர் என்னும் ஊரில் வாழும் சடங்கவி என்னும் திருநாமத்தைப் பெற்ற வேதியனிடம் சிவந்த நிறத்தைக் கொண்ட திரு மகளைப் போன்ற கன்னிகையைத் திருமணம் புரிந்து கொள்ளும் செய்தியைச் சொல்லி ஆளை அனுப்பினார்.'
பாடல் வருமாறு:
"தந்தையார் சடைய னார்தம்
தனித்திரு மகற்குச் சைவ அந்தணர் குலத்துள் தங்கள்
அரும்பெரும் மரபுக் கேற்ப வந்ததொல் சிறப்பிற் புத்துணர்ச்
சடங்கவி மறையோன் தன்பால் செந்திரு அனைய கன்னி
மணத்திறம் செப்பி விட்டார்.'