பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 201" -

விருப்பத்தை உடைய பக்தர்களும் சிவகண நாதர்களும் நுழையும் தங்கத்தைப் பதித்த வடிவம் நெடுங்காலமாக விளங்கும் கோபுர வாசலில் வணங்கிவிட்டுக் கூப்பிய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த தங்களுடைய கைகளைத் தங்களுடைய தலைகளின்மேல் வைத்துக் கொண்டு வருகிறவர்களோடு சுந்தர மூர்த்தி நாயனார் ஆலயத்துக்குள் நுழைந்தார். பாடல் வருமாறு: -

  • மால்அயன்சதம கன்பெருந் தேவர்

மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கிச் சீல மாமுனிவர் சென்றுமுன் துன்னித் <

திருப்பி ரம்பின் அடிகொண்டு திளைத்துக் காலம் நேர்படுதல் பார்த்தயல் நிற்பக் - காதல் அன்பர்கண நாதர் புகும்பொற் கோலம் கீடுதிரு வாயில் இறைஞ்சிக்

குவித்த செங்கைதலை மேற்கொடு புக்கார்.’’

மால்-திருமால். அயன்-பிரமதேவன். சதமகன்-நுாறு: யாகங்களைச் செய்து தன்னுடைய பத்வியைப் பெற்ற இந்திரன். பெரும்-வேறாக உள்ள பெருமையைப் பெற்ற: தேவர்-தேவர்கள் : ஒருமை பன்மை மயக்க்ம் மற்றும் உள்ளவர்கள்-வேறாக இருக்கிறவர்கள். முற்றும்-ஆகிய யாவரும். நெருங்கி-நெருக்கமாக நின்று கொண்டு. ச்: சந்தி. சீல-சீலத்தையும். மா-பெருமையையும் பெற்ற, முனிவர்முனிவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். சென்று-போய். முன்-நடராஜப் பெருமானுடைய ஆலயத்திற்கு முன்னால். துன்னி-சேர்ந்து நின்றுகொண்டு. த், சந்தி. திரு-அழகிய. ப்: சந்தி, பிரம்பின்-நந்திதேவர் தம்முடைய கையில் வைத்துக் கொண்டிருக்கும் பிரம்பினால். அடி-அடிகளை; ஒருமை பன்மை மயக்கம். கொண்டு-பெற்றுக்கொண்டு. திளைத்து-ஆனந்தசாகரத்தில் முழுகி இன்புற்று. க், சந்தி. காலம்-நடராஜப் பெருமானைத் தரிசித்து வணங்குவதற்கு. உரிய நேரம். நேர்படுதல்-கிடைத்தலை பார்த்து - எதிர்