பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பெரிய புராண விளக்கம்-2

பார்த்துக்கொண்டு. அயல்-ஒருவருக்கு ஒருவர் பக்கத்தில் பக்கத்தில், நிற்ப-நின்றுகொண்டிருக்க. க், சந்தி. காதல்நடராஜப் பெருமானை வணங்கும் விருப்பத்தைப் பெற்ற அன்பர்-பக்தர்களும் ஒருமை பன்மை மயக்கம், கணநாதர்சிவ கணநாதர்களும்; ஒருமை பன்மை மயக்கம். புகும். நுழையும். பொன்-தங்கத்தைப் பதித்த, கோலம்-வடிவம். நீடு-நெடுங்காலமாக விளங்கும். வாயில்-கோபுர வாசலில். இறைஞ்சி-நின்ற்வாறே நடராஜப் பெருமானை வணங்கி விட்டு. க்: சந்தி. குவித்த-சுப்பிய செங்கை. தங்களுடைய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த கைகளை ஒருமை பன்மை மயக்கம். தலைமேல்-தங்களுடைய தலைகளின்மேல்; ஒருமை பன்மை மயக்கம். புக்கார்-துழைந்த வர்களோடு சுந்தரமூர்த்தி நாயனாரும் ஆலயத்துக்குள் நுழைந்தார்.

பின்பு உள்ள 104-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: பெரிய திருமதில் சிறந்து விளங்கும் சிவந்த தங்கத்தால் வேயப்பெற்ற சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தையும், விளங்குகின்ற பேரம்பலம் ஆகிய மேருமலையைச் சுந்தரமூர்த்தி நாயனார் வலமாக வர வேண்டிய முறைப்படி வலமாக வந்து நடராஜப் பெருமானை வணங்கிய பிறகு அவ்வாறு வணங்கிய மகிழ்ச்சியோடு, பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையான இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களினுடைய முதலிலும் நடுவிலும் முடிவிலும் தம்முடைய பக்தர்களுடைய திருவுள்ளங்களிலும் மலர்ச்சியைப் பெற்று விளங்கிய, அழகு வளரும் சோதி சூழ்ந்து விளங்கிய, திருச்சிற்றம்பலத்திற்கு முன்னால் உள்ள திரு அணுக்கன் திரு வாசலை. பாடல் வருமாறு:

பெருமதில் சிறந்த செம்பொன்மா ளிகையின்

பிறங்குபேரம்பலம் மேரு வருமுறை வலங்கொண் டிறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்