தடுத்தாட்கொண்ட புராணம் 203
அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்தம் சிங்தையில் அலர்ந்த திருவளர் ஒளிசூழ் திருச்சிற்றம் பலம்முன் திருஅணுக் கன்திரு வாயில். ' இந்தப்பாடல் குளகம். பெரு-பெரிய மதில்-திருமதில். சிறந்த-சிறப்போடு விளங்கிய செம்பொன்-சிவந்த தங்கத் தால் வேயப் பெற்ற, மாளிகையின்-சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தையும். பிறங்குவிளங்கும். பேரம்பலம் - பேரம்பலமாகிய, மேரு - மேரு மலையை. வரு-வலமாக வரும். முறை-முறைப்படி. வலம் கொண்டு - சுந்தரமூர்த்தி நாயனார் வலமாக வந்து. இறைஞ்சிய - நடராஜப் பெருமானை வணங்கிய பின்னர்பிறகு, வணங்கிய - அவ்வாறு வணங்கிய. மகிழ்வொடும்மகிழ்ச்சியோடும். அரு-பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையான மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். முதலில்முதலிலும், நடுவினில்-இடையிலும்.கடைசியில்-இறுதியிலும். அன்பர்தம்-தம்முடைய பக்தர்களின்; ஒருமை பன்மை மயக்கம். சிந்தையில்-திருவுள்ளங்களிலும்; ஒருமை பன்மை. மயக்கம். அலர்ந்த-மலர்ச்சியைப் பெற்று விளங்கிய, திருஅழகு. வளர்-வளரும். ஒளி-ஜோதி. சூழ்-சுற்றி வீசும். திருச் சிற்றம்பலம்-திருச்சிற்றம்பலத்திற்கு. முன்-முன்னால் உள்ள. திரு.அழகிய அணுக்கன்-நடராஜப் பெருமானுடைய சந்நிதிக்குச் சமீபத்தில் விளங்கும். திரு-அழகிய வாயில். வாசலுக்குள். புகுந்தார் - சுந்தர மூர்த்தி நாய னார் துழைந்தார். .
திருச்சிற்றம்பவத்தைப் பொன்னால் வேய்ந்தவன் முதற் பராந்தகச் சோழமன்னன். இது, கோதிலாத் தேறல் குளிக்கும் திருமன்றம்,கர்தலாம் பொன்வேய்ந்த காவலனும்' ..(16) என்று விக்கிரம சோழன் உலாவில் வருவதைக் காண்க. இரண்டாம் குலோத்துங்க சோழமன்னனும் திருச் சிற்றம்பல்த்தைப் பொன்னால் வேய்ந்தான். இது.