தடுத்தாட்கொண்ட புராணம் 207
தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றதின் தன்மை.".
"சீருறு சிந்தை எழுந்ததோ தேனே.', 'சிந்தையே கோயில் கொண்டனம் பெருமான்.', 'பொய்யனேன் அகம்நெகப் புகுந்து.', 'என் மனத்தி னுள்ளே வரும் பெருமான்.", "உள்குவார் மனத்தின் உறுசுவை அளிக்கும் ஆரமுதே' உள்புகுந்தென் உளம் மன்னி.', 'உயிர் கலந்தான் உளம்பிரியான்.', 'அடியேன் உள்ளத்துள். ஒளிர்கின்ற ஒளியே.', " அ ற ைவயே ன் மனமே
கோயிலாக் கொண்டாண் டளவிலா ஆனந்தம் அருளி. , "என் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே.', "அன்பால்நீ அகம் தெகவே புகுந்தருளியாட் கொண்டது.' :மலர்ப்பாதம் மனத்தில் வளர்ந் துள்ளுருக.', 'செறியும் கருத்தில் உருத்தமுதாம் சிவபதத்தை.", "சித்தமே புகுந் தெம்மை ஆட்கொண்டு.', 'சித்த மார்தரு சேவடி", "சிறியோமை ஒவாதுள்ளம் கலந்துணர்வாய் உருக்கும்.', துண்ணென என்னுளம் மன்னிய சோதி." என்று மாணிக்க வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.
பின்பு உள்ள 105-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
இந்தப் பூமண்டலத்தில் வாமும் மக்கள் தோற்றப் பொலிவை அடையவும், இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும் தம்முடைய திருவடிகளில் சிலம்புகளாக அமைந்து முழங்கவும், சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத் தில் நின்றுகொண்டு திருமாலும் பிரம தேவனும் தேட, தந்தையாரைப் போன்ற நடராஜ்ப் பெருமானார் சிதாகாசத் தில் திருநடனம் புரிந்தருளுகின்ற அந்தப் பெருமானாரை அஞ்சலியாக மலரச் செய்து அந்தப் பெருமானாருடைய சந்நிதியில் கூப்பிய திருக்கரங்களோ, ஆனந்த சாகரத்தில் முழுகி இன்புற்ற விழிகளோ, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக் கரணங்களோ, தன்னுடைய உள்ளத்தில் சேர்ந்திருந்த பக்தி பிடர் பிடித்து உந்தத் தவம் புரிந்த பெரியவனாகிய, சுந்தரமூர்த்தி போய்த் தரையில்