பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பெரிய புரான் விளக்கம்-2

ಟಿಆಹಿಣ நடராஜப் பெருமானை வணங்கி விட்டுத் திருக் களிற்றுப் படியின் பக்கத்தில் எழுந்து வந்து நின்றான்,' பாடல் வருமாறு:

வையகம் பொலிய மறைச்சிலம் பார்ப்ப

மன்றுளே மாலயன் தேட

ஐயர்தாம் வெளியே ஆடுகின் றாரை

அஞ்சலி மலர்த்திமுன் குவித்த

கைகளோ திளைத்த கண்களோ அந்தக்

கரணமோ கலந்தஅன் புந்தச்

செய்தவப் பெரியோன் சென்றுதாழ்ந் தெழுந்தான்

திருக்களிற் றுப்படி மருங்கு."

வையகம்-இந்தப் பூ மண்டலத்தில் வாழும் மக்கள்; இட

ஆகுபெயர். பொலிய-தோற்றப் பொலிவை அடையவும். மறை-இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம்,

அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களாகிய, ஒருமை

பன்மை மயக்கம் ச் சந்தி. சிலம்பு- சில்ம்புகள்; ஒருமை பன்மை மயக்கம். ஆர்ப்ப - தம்முடைய திருவடிகளில்

முழங்கவும். மன்றுள்-சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில்

விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் நின்று கொண்டு. ஏ. அசை, நிலை. மால்-திருமாலும், அயன்-பிரம தேவனும். தேடதம்முடைய திருவடிகளையும் திருமுடியையும் தேட ஐயர் தாம்-தந்தையாரைப் போன்ற நடராஜப் பெருமானார். தாம்: அசை நிலை. ஐயர்-அழகைப் பெற்றவர் எனலும் ஆம், வெளி-சிதாகாசத்தில். ஏ.அசைநிலை. ஆடுகின்றாரைதிரு நடனம் புரிந்தருளும் அந்தப் பெருமானாரை. அஞ்சலிஅஞ்சலியாக மலர்த்தி-மலரச் செய்து முன்-அந்தப் பெரு மானாருடைய சந்நிதியில். குவித்த-கூப்பிக் கும்பிட்ட கை களோ-சுந்தர மூர்த்தியின் திருக்கரங்களோ. திளைத்தஆனந்த சாகரத்தில் முழுகி இன்புற்ற. கண்களோ-விழி களோ, அந்தக் கரண்மோ-மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக் கரணங்களோ ஒருமை பன்மை மயக்கம்.