தடுத்தாட்கொண்ட புராணம் £3
தந்தையார்-அந்த இளைஞருடைய தகப்பனாராகிய, சடையனார் தம்-சடையனார் என்னும் திருநாமத்தைக் கொண்டவருடைய. தம்: அசை நிலை. தனி-ஒப்பற்றத்:சந்தி. திரு.அழகிய மகற்கு-புதல்வனுக்கு ச்சந்தி. சைவ அந்தணர்-சைவசமயத்தைச் சார்ந்த பிராமணராகிய சிவாசாரியாருடைய. குலத்துள்-குடும்பத்தில். தங்கள்தங்களுடைய. அரும்-அருமையும். பெரும்-பெருமையும் கொண்ட. மரபுக்கு-பரம்பரைக்கு. ஏற்பஏற்றவாறு. வந்த-தொன்று தொட்டு வந்த தொல்-பழமையான. சிறப்பில்-சிறப்பைப் பெற்ற உருபுமயக்கம். புத்துார்புத்துார் என்ற ஊரில் வாழும், சடங்கவி மறையோன் தன்பால்-சடங்கவி சிவாசாரியனிடத்தில். தன்: அசை நிலை. மறையோன்-ஆதிசைவ அந்தணன். செம்-சிவந்த நிறத்தைக் கொண்ட திரு-திருமகளை. அனைய-போன்ற அழகை உடைய, கன்னிகன்னிகையை. மணத்திறம்திருமணம் புரிந்து கொள்ளும் செய்தியை, செப்பி-சொல்லி. விட்டார்-ஆளை அனுப்பினார். -
பெண்மணிகளுக்குத் திருமகள் உவமை:பங்கயச் செல்வி, பாண்டிமா தேவி.’’ என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாய னாரும், பெருந் திரு இமவான் பெற்றபெண்கொடி. என்று திருநாவுக்கரசு நாயனாரும், பாடியருளியவற்றைக் காண்க.
பின்பு வரும் 8-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'பிறந்த சாதி முதலியவற்றைப்பற்றி அறிந்த அறிவில் சிறந்து நின்ற வேதியர்கள் கோத்திரத்தின் வகையையும் ஆராய்ந்து பார்த்தார்கள். நல்ல பண்புகளைப் பெற்ற' முதியவர்கள் கூறச் சடங்கவி சிவாசாரியார் அவர்கள் கூறிய நல்ல குணங்களை ஏற்றுக்கொண்டு மலர்ச்சியை வெளியிடும் முகத்தை உடையவராகித் திருமணமாகிய மங்கலகாரியத்தினுடைய உண்மையைப் பற்றிப் பல கருத் துக்களை வந்தவர்களுடன் சொல்லி மணப்பதற்கு இருந்த: ஆடவனும், கன்னிகையும் பலவகையில் ஒத்திருந்த இயல்