தடுத்தாட்கொண்ட புராணம் 211 .
இடைச்சுவர் ஒன்று இருக்கிறது. அந்தச் சுவரில் நான்கு வாயில்கள் உள்ளன. அந்தச் சுவருக்கு அப்பால் கடைசியாக ஒரு சுவர் இருக்கிறது. அதில் மூன்று வாயில்கள் அமைந் துள்ளன. அந்தச் சுவருக்கு அப்பால் பள்ளியறை இருக்கிறது. அதில் ஒர் அழகிய ஆடவன் படுத்திருக்கிறான். அவனோடு கூடி இன்புற விரும்பிய மங்கை ஒருத்தி வெளியிலே உள்ள சுவரில் இருக்கும் ஐந்து வாயில்களில் ஒன்றின் வழியாக உள்ளே நுழைந்து பிறகு எல்லா வாயில்களையும் மூடி விடு கிறாள். பின்பு இடைச்சுவரில் உள்ள வாயில்கள் நான்கினுள் ஒன்றின் வழியாக உள்ளே புகுந்து அந்த நான்கு வாயில் களையும் அடைத்து விடுகிறாள். பிறகு உள்ள கடைச்சுவ்ரில் உள்ள மூன்று வாசல்களுக்குள் ஒன்றின் வழியே புகுந்து எல்லா வாயில்களையும் மூடிவிடுகிறாள். அப்பால் நடுவில் உள்ள அறையில் படுத்திருக்கும் அழகனோடு கூடிக் குலாவி எல்லை இல்லாத இன்பத்தை அடைகிறாள். இந்த வரலாற்றோடு சுந்தரமூர்த்தி நாயனார் நடராஜ ப் பெருமானைத் தரிசித்த முறையை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
மெய், வாய், கண்கள், மூக்கு, செவிகள் என்ற ஐந்து இந்திரியங்களும் தத்தமக் குரிய செயல்களைச் செய்iச் சுந்தரமூர்த்தி நாயனார் நடராஜப் பெருமானுட்ைய சந்நிதிக்கு எழுந்தருளினார். அப்போது கண்கள்ை அல்லாத வேறு இந்திரியங்கள் உணர்ச்சியற்று நின்றன. கண்களே ஏனைய இந்திரியங்களின் ஆற்றலையும் பெற்று இயங்கின. நாயனார் தம்முடைய கண்களால் நடராஜப் பெருமான்ைதி தரிசனம் செய்தார். பிறகு கண்களை மூடிக்கொண்டார்: புறத்திலே தரிசித்த நடராஜப் பெருமானை அகத்திலே தரிசிக்கலானார். அப்போது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தக் கரணங்களில், ஒன்றைப் பற்றிக்கொண்டு லயிக்கும் சித்தமே. தொழிற்பட்டது. அப்போது அவ்ருடைய சித்தமே திருச்சிற்றம்பல்மாக, 'நினைப்பவர் மனம் கோயில்ாக் கொள்பவன்' ஆகிய நடராஜப் பெருமானுடைய திருவுருவக்கர்ட்சியில் நிலைத்து