212 - பெரிய புராண விளக்கம்-2
நின்றது. அப்போது சத்துவம், இராஜசம், தாமதம் என்ற மூன்று குணங்களில் ஏனைய இரண்டும் ஒடுங்கி நிற்கச் சத்துவம் ஒன்றே இயங்கியது. உண் முகத்தில் கண்ட காட்சியில் நாயனார் ஈடுபட்டபோது காண்பான், காணப் படுபவன், காட்சி என்ற மூன்று புடிகளும் அடங்கிவிட்டன.
சத்துவ குணமும் நழுவியது. நடராஜப் பெருமானுடைய ஆனந்தத் தாண்டவத்தைத் தரிசித்ததனால் உண்டான பேரானந்த சாகரத்தில் முழுகித் தம்முடைய உணர்வையே இழந்து அந்த ஆனந்த அநுபவத்தில் இரண்டறக் கலந்து விளங்கினார். அதற்குப் பிறகே அவரிடம் முழு மலர்ச்சி உண்டாயிற்று.
பின்பு வரும் 107-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
தெளிவான நிலாவை வீசும் பிறைச் சந்திரன் மலர்ச்சியை அடைந்த சடாபாரத்தைத் தலையில் பெற்ற நடராஜப் பெருமானே, அடியேன் தேவரீருடைய திரு நடனத்தைக் கும்பிட்டு வணங்கும் பாக்கியத்தை அடைந்து, அடியேன் இந்த மண்ணுலகத்தில் பிறந்த பிறப்பே அடியேனுக்குத் தூயதாக விளங்கும் பேரானந்தம் ஆகும்.' என்று சுந்தரமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து தம்முடைய கண்களிலிருந்து ஆனந்த பாஷ்பம் மலையிலிருந்து குதிக்கும் அருவியைப் போலச் சொரியத் தம்முடைய கைகளாகிய செந்தாமரை மலர்களைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக் கும்பிட்டு விட்டு, உரிய பண்ணோடு அமைந்து பொருளை அறிவதற்கு அருமை யாக உள்ள ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி நடராஜப் பெருமானை வாழ்த்தி வணங்கினார். பாடல் வருமாறு:
தெண்ணிலா மலர்ந்த வேணியாய், உன்றன்
திருகடம் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு
வாவிதாம் இன்பம்.ஆம்'. என்று