பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம 213

கண்ணில்ஆ னங்த அருவிநீர் சொரியக் கைம்மலர் உச்சிமேற் குவித்துப் பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்

பாடினார் பரவினார் பணிந்தார்.'

- தெண்-தெளிவான. நிலா.நிலாவை வீசும் பிறைச் சந்திரன் ஆகுபெயர். மலர்ந்த-மலர்ச்சியை அடைந்த, வேணியாய்-சடாபாரத்தைத் தலையிற் பெற்ற நடராஜப் பெருமானே. உன்றன்-தேவரீருடைய. திருநடம்-அழகிய ஆனந்தத் தாண்டவத்தை. கும்பிட-அடியேன் கும்பிட்டு வணங்கும். ப்: சந்தி. பெற்று-பாக்கியத்தை அடைந்து. மண்ணில்-இந்த மண்ணுலகத்தில்.ஏ அசை நிலை வந்த-அடி யேன் பிறந்த பிறவியே-மனிதப் பிறப்பே. எனக்கு-அடி யேனுக்கு. வாவிதாம் - தூயதாக விளங்கும். இன்பம்பேரானந்தம். ஆம் ஆகும். என்று-எனச் சுந்தரமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து கண்ணில்-தம் முடைய கண்களிலிருந்து: ஒருமை பன்மை மயக்கம்; உருபு மயக்கம். ஆனந்த-ஆனந்த பாஷ்பம். அருவி-மலையிலிருந்து குதிக்கும் அருவியில் உள்ள. நீர்-நீரைப் போல. சொரியபொழிய. க், சந்தி. கை தம்முடைய கைகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். ம்: சந்தி. மலர்-செந்தாமரை மலர்களை: ஒருமை பன்மை மயக்கம். உச்சிமேல்-தம்முடைய தலையின் மேல். குவித்து-வைத்துக் கூப்பிக் கும்பிட்டு விட்டு. ப்: சந்தி. பண்ணினால்-உரிய பண்ணோடு: உருபு மயக்கம். நீடி-நெடுங் காலம் விளங்கி. அறிவரும்-பொருள் முழுவதும் தெரிந்து கொள்வதற்கு அருமையாக இருக்கும். பதிகம்-ஒரு திருப்பதி கத்தை. பாடினார்-அந்த நாயனார் பாடியருளி: முற்றெச்சம். பரவினார்-நடராஜப் பெருமானை வாழ்த்தி; முற்றெச்சம். பணிந்தார்.தரையில் விழுந்து வணங்கினார்.

சிதம்பரத்தைப் பற்றிக் குறிஞ்சிப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய திருப்பதிகத்தில் வரும் முதற் பாசுரம் வருமாறு :