பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 - பெரிய புராண விளக்கம்-2

மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே

மனனேநீ வாழும் நாளும் தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில்

'இடும்போது தடுத்தாட் கொள்வான் கடுத்தாடு கரதலத்தில் தமருகமும், எரிஅகலும் கரிய பாம்பும் பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.” இந்தத் தலத்தைப் பற்றித் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் குறிஞ்சி, காந்தார பஞ்சமம் என்னும் பண்களில் திருப்பதிகங்களைப் பாடியருளியிருக்கிறார்; அவற்றுள் காந்தார பஞ்சமத்தில் அமைந்த பாசுரம் ஒன்று வருமாறு:

ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்

அந்தணர்பிரியாதசிற் றம்பலம் நாடினாயிட மாநறுங் கொன்றை நயந்தவனே

பாடினாய் மறையோடுபல் கீதமும் பல்சடைப்பணி கால்கதிர் வெண்டிங்கள்

சூடினாயருளாய் சுருங்களம் தொல்வினையே.”

இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் கொல்லிப்பண்ணில் ஒரு திருப்பதிகத்தையும், திருவிருத்தம், திருக்குறுந்தொகை, பெரிய திருத்தாண்டகம், புக்க திருத் தாண்டகம் என்பவை அடங்கிய் திருப்பதிகங்களையும் பாடி யருளியிருக்கிறார்; அவற்றுள் பெரிய திருத்தாண்டகம் ஒன்று வருமாறு: - - -

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை

o அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனைத்தேனைப் பாலைத்

திகழொளிய்ைத் தேவர்கள்தம் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்

கனைகடலைக் குலவரைய்ைக் கலந்துநின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூரான்ப் பேசாத நாளெல்லாம் பிறவா நாள்ே."