320 - பெரிய புராண விளக்கம்-2
சிவநிதிக்கே.', 'தில்லை மன்னை.", "தில்ல்ைச் சிற்றம் பலத்துத் திருநடனே.”, "நடம் செய்சிற் றம்பலத்தான்.’’, 'அம்பலத் தெம்பரன்.', 'வரகுணன்றன் முடியே தருகழல் அம்பலத் தாடிதன் மொய்கழலே.', 'தமருகமும் பிடித்தாடி சிற்றம்பலத்தை.', 'வான்றலை நாதனைக் காண்பதென் றோ தில்லை மன்றிடையே.', 'மன்றங் கமர்திருச் சிற்றம் பலவ.', 'தில்லைதன்னுட், செற்றரு மாமணிக் கோயிலில் நின்றது.”, “பூம்புலி யூருள் நின்ற, அவ்வெறி மாமதிக்
கண்ணியனை.', 'சிற்றம் பலத்துப் பெருநடனை.', 'தில்லை அம்பலத்துள், இச்செல்வன்.', 'உம்பரின் ஊர் எரித்த, அப்பர்க் கமுதத் திருநடர்க்கு.', 'நாவார் புகழ்த் தில்லை அம்பலத்தான்.', 'பொன்னக ராயநற் றில்லை புகுந்து புலிச்சுரத்து, மன்னவ ராய அரர்க்கு.', 'சிற்றம் பல முகடு, கொங்கிற் கணகம் அணிந்த ஆதித்தன்.”, “விண்
தோயும்நெற்றி, வகுத்த மதில்தில்லை அம்பலத்தான்.', "செம்பொன் அணிந்து சிற்றம் பலத்தைச் சிவலோகம் எய்தி.", "தேறும் புனற்றில்லைச் சிற்றம்பலத்துள், ஊறும் அமிர்தை. என்று நம்பியாண்டார் நம்பியும் பாடியருளிய வற்றைக் காண்க. - -
பிறகு வரும் 108-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: "திருவெண்ணெய் நல்லூரில் விளங்கும் ஆல்யமாகிய திருவருட்டுறையில் எழுந்தருளியிருக்கும் கிருபாபுரீசர் முன்னால் தடுத்து ஆட்கொண்ட தொண்டராகிய சுந்தர மூர்த்தி நாயனாருக்கு முன்னால் ஒப்பற்றதும் பெருமையைப் பெற்றதும் ஆகிய ஆனந்தத் தாண்டவத்தைப் புரிவதற் காகத் தூக்கிய செந்தாமரை மலரைப் போன்ற இடத் திருவடியை உடைய நடராஜப் பெருமானாருடைய திரு வருளினால், முத்துக்களை வீசும் நீர் புரளும் அலைகளைப் பெற்றதும் பொன்னைக் கொழிப்பதும் ஆகிய காவிரி ஆற்றின் நீர் ஓடிப் பாயும் நீளமான அழகைப் பெற்ற வயல்கள் சூழ்ந்த திருவாரூரில் உள்ள எம்மிடம் நீ வருவாயாக’ என்று ஆகாய்த்தில் அந்த நாயனார்