பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பெரிய புராண விளக்கம்-2

பினால் அன்போடு தம்முடைய புதல்வியைத் திருமணம் புரிந்து வழங்குவதற்கு - ஒப்புக்கொண்டார்.” பாடல் வருமாறு: -

குலமுதல் அறிவின் மிக்கார்

கோத்திர முறையும் தேர்ந்தார் நலமிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை ஏற்று மலர்தரு முகத்தன் ஆகி

மணம்புரி செயலின் வாய்மை பலவுடன் பேசி ஒத்த

பண்பினால் அன்பு நேர்ந்தான்.

குல-பிறந்த சாதி.முதல்-முதலியவற்றை அறிவின்தெரிந்து கொண்டிருந்த அறிவினால், மிக்கார்-சிறப்பை அடைந்திருந்த வேதியர்கள்; ஒருமை பன்மை மயக்கம், கோத்திர-கோத்திரத்தினுடைய முறையும்-வகையையும். தேர்ந்தார்-ஆராய்ந்து பார்த்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஒரே கோத்திரத்தில் பிறந்த ஆடவனையும் கன்னிகையையும் திருமணம் புரிவித்தல்மரபன்று; ஆதலால் கோத்திரத்தின் வகையை ஆராய்ந்து பார்த்தார்கள். நலம்-நல்ல பண்புகள்: ஒருமை பன்மை மயக்கம். மிகுமிகுதியாகப் பெற்ற முதியோர்-தன்னுடைய குடும்பத்தில் உள்ள முதியவர்கள் ஒருமை பன்மை மயக்கம். சொல்லஒப்புக்கொண்டு கூற. ச் சந்தி. சடங்கவி-சடங்கவி சிவாசாரியன். தன்மை-சுந்தர மூர்த்தியின் நல்ல பண்பு களை. ஏற்று-ஏற்றுக்கொண்டு. மலர்தரு-மலர்ச்சியை வெளிப் படுத்தும். முகத்தன் ஆகி-முகத்தை உடையவனாகி. மணம்-திருமணத்தை. புரி-செய்யும். செயலின்-மங்கல காரியத்துக்கு உரிய, பல-பல கருத்துக்களை. உடன்வந்தவர்களோடு. பேசி-மொழிந்து. ஒத்த-சுந்தரமூர்த்திக் கும் தன்னுடைய புதல்விக்கும் ஒத்திருந்த பண்பினால்