தடுத்தா ட்கொண்ட புராணம் 22፫ ̇
சிதம்பரத்தை அடைந்திருந்த காலத்தில் வந்து ஓர் அசரீரி வாக்கு எழுந்தது: அந்த வாக்கைக் கேட்டவுடன் நடராஜப் பெருமானைத் தரையில் விழுந்து பணிந்த அந்த நாயனார் அந்தக் கட்டளையைத் தெரிந்து கொண்டு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டிருந்தார். பாடல் வருமாறு:
தடுத்துமுன் ஆண்ட தொண்ட னார்முன்பு
தனிப்பெரும் தாண்டவம் புரிய எடுத்தசே வடியார் அருளினால், தரளம்
எறிபுனல் மறிதிரைப் பொன்னி ... * மடுத்தநீள் வண்ணப் பண்ணைஆ ரூரில்
வருககம் பால்..' என வானில் அடுத்தபோ தினில்வங் தெழுந்ததோர் நாதம்
கேட்டலும் அதுவுணர்ந் தெழுந்தார்.
தடுத்து-திருவெண்ணெய் நல்லூரில் உள்ள ஆலயமாகிய, திருவருட்டுறையில் எழுந்தருளியிருக்கும் கிருபாபுரீசர் தடுத்து. முன்-முன்பு ஒரு நாள். ஆண்ட-ஆட்கொண்ட. தொண்டனார்.தொண்டராகிய சு ந் த ர மூ ர் த் தி நாய, னாருக்கு. முன்பு-முன்னால், இடமுன். தனி-ஒப்பற்ற. ப்: சந்தி. பெரும்-பெருமையை உடைய. தாண்டவம்-ஆனந்தத் தாண்டவத்தை. புரிய - செய்தருளுவதற்காக. எடுத்ததுரக்கிய, சேவடியார்-செந்தாமரை மலரைப் போலச் சிவந்த இடத்திருவடியைப் பெற்றவராகிய நடராஜப் பெருமானாருடைய. அருளினால் - திருவருளால். தரளம்முத்துக்களை ஒருமை பன்மை மயக்கம். எறி-எடுத்து வீசும். புனல்-நீர். மறி-சுருண்டு வரும். திரை-அலைகளைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. பொன்னி-பொன்னைக் கொழிக்கும். காவிரி ஆற்றில் ஒடும் நீர் ஆகுபெயர். "பொன்னி பெர்ன்கொழிக்கும் அலையார்' என வருதலைக் காண்க. மடுத்த-பாய்ந்த நீள்-நீளமான வண்ண-பச்சை நிறத்தைப் பெற்ற பயிர்கள் வளர்ந்து நிற்கும்; ஆகுபெயர். பண்ணை-வயல்கள் சூழ்ந்த ஒருமை ப்ன்மை மயக்கம்.