222 பெரிய புராண விளக்கம்-2
ஆரூரில்-திருவாரூருக்கு உருபு மயக்கம். நம்பால்-எம்மிடம். வருக-நீ வருவாயாக. என-என்று; இடைக்குறை. வானில்ஆகாயத்தில். அடுத்த-சுந்தர மூர்த்தி நாயனார் நடராஜப் பெருமானுடைய சந்நிதியில் இருந்த போதினில்-சமயத்தில். வந்து-வன்மீக நாதருடைய ஆணையால் வந்து. ஓர் நாதம்ஓர் அசரீரி வாக்கு. எழுந்தது-எழுந்து கேட்டது. கேட்டலும்கேட்டவுடன். அது-அந்த அசரீரி வாக்கை. உணர்ந்துதெரிந்து கொண்டு. எழுந்தார்-நடராஜப் பெருமானைத் தரையில் விழுந்து வணங்கிக் கொண்டிருந்த அந்த நாயனார் தரையிலிருந்து எழுந்து நின்றார்.
அடுத்து' வரும் 109-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
சிதம்பர்த்தில் உள்ள் ஆலயத்தில் விளங்கும் திருச் சிற்றம்பலத்தில் நின்றுகொண்டு ஆனந்த்த் தாண்டவம் :புரிந்தருளும் நடராஜப் பெருமானாருடைய பெருமையைப் பெற்ற திருவருளால் அசரீரி வாக்கில் கேட்டவாறு அமைந்த அந்தக் கட்டளையைத் தம்முடைய தலையின்மேல் தாங்கிக் கொண்டு சூடிய தம்முடைய கைகளால் அஞ்சலியைச் செய்துகொண்டு, பிறகு தரையில் விழுந்து வணங்கும் ஒவ்வொரு தடவையிலும் திருவாரூருக்குப் புறப்படுவதற்கு விடையை அந்தப் பெருமானாரிடம் பெற்றுக் கொண்டு, பக்கத்தில் மிக்க பிரகாசத்தோடு வளர்ந்து விளங்கும்.திருச் சிற்றம்பலத்தை வலமாக வந்து,மீண்டும் ஆனந்தத் தாண்டவ மூர்த்தியைப் பணிந்துவிட்டு வந்து, உயரமான ஆகாயம் தாழுமாறு உயரமாக உள்ள தங்க மலையாகிய மேருவைப் போல ஏழு தளங்களைப் பெற்ற கோபுரத்தின் வாசலைத்
தாண்டி. பாடல் வருமாறு:
- ஆடு கின்றவர்பேர்அருளினால்கிகழ்ந்த அப்பணி சென்னிமேற் கொண்டு -
குடுதம் கரங்கள் அஞ்சலி கொண்டு
தொழுக்தொறும் புறவிடை கொண்டு.