224. பெரிய புராண விளக்கம்-2
நடராஜப் பெருமானைப் பணிந்து விட்டு, திருமணம் நிகழும் செல்வ வளத்தைப் பெற்ற வீதியின் வழியே எழுந்தருளி, நிலை பெற்று விளங்கிய அழகிய சிவத்தலமாகிய அந்தச் சிதம்பரத்தினுடைய தெற்குத் திக்கில் உள்ள வாசலைத் தாண்டி அப்பால் எழுந்தருளி, தூரத்தில் இருக்கும் அழகிய சிதம்பரத்தின் எல்லையில் மீண்டும் நடராஜப் பெருமானை வணங்கிவிட்டுக் கொன்றை மலர் மாலையை அணிந்த நீண்ட சட்ாபாரத்தைத் தன்னுடைய தலையில் பெற்ற நடராஜப் பெருமானுடைய திருவருளையே தியானம் புரிபவராகி அழகிய கொள்ளிட ஆற்றைத் தாண்டி எழுந்தருளினார்." பாடல் வருமாறு:
கின்றுகோபுரத்தை கிலமுறப் பணிந்து
நெடுங்திரு வீதியை வணங்கி
மன்றலார் செல்வ மறுகினு டேகி
மன்னிய திருப்பதி அதனில்
தென்றிசை வாயில் கடந்துமுன் போக்து
சேட்படும் திருவெல்லை இறைஞ்சிக்
கொன்றைவார் சடையான் அருளையே நினைவார்
கொள்ளிடத் திருகதி கடந்தார். '
நின்று-சுந்தரமூர்த்தி நாயனார் நடராஜப் பெருமானு: டைய ஆலயத்தின் முன் உயரமாக நிற்கும் கோரத்தின்கீழ் உள்ள வாசலைத் தாண்டி வந்து நின்றுகொண்டு. கோபுரத்தை-அந்தக் கோபுரத்தை. நிலமுற-தரையில் படிய விழுந்து. ப்: சந்தி. பணிந்து-வணங்கிவிட்டு. நெடும்-நீளமாக இருக்கும். திரு-அழகிய செல்வர்கள் வாழும் எனலும் ஆம் திணை மயக்கம். வீதியை-தெருவில் நின்று கொண்டு. வணங்கி-தரையில் விழுந்து நடராஜப் பெருமானைப்பணிந்து விட்டு. மன்றல்-திருமணம். ஆர்-நிகழ்ந்து நிறைந்த செல்வவளத்தைப் பெற்ற மறுகினுாடு-ஒரு தெருவின் வழியே. ஏகிஎழுந்தருளி. மன்னிய-நிலைபெற்று விளங்கிய திரு-அழகிய, ப்: சந்தி. பதி-சிலத்தலமாகிய, அதனில்-அந்தச் சிதம்பரத்தில் உள்ள. தென்-தெற்கு. திசை-திக்கில் உள்ள. வாயில்