230 பெரிய புராண விளக்கம்-2
தன் முக்கட் பிரான்." என்று நம்பியாண்டார் நம்பியும், "தொடுத்த இதழிசூழ் சடையார்.', 'துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை.”, 'கொன்றை நறுஞ் கடையார்.', 'கொன்றை மலர்ச்சடையார்.', 'கொன்றை. வார் சடையினார்.', 'பொன்னிதழ்க் கொன்றைவன்னி புனவிள மதியம் நீடு சென்னியார்.', 'கொன்றை வார். சடை முடியரை.', 'கொன்றை நறுஞ்சடை முடியார்.', 'தேனக்க மலர் க் கொன் ைற ச் செஞ்சடையார்.', "கொன்றை முடியார்,', 'கொந்தவிழ் கொன்றை முடிக் கத்தனார்.”, “வெறியுறு கொன்றை வேணி விமலரும்.', "நறைஇதழித் திருமுடியார்.', 'கொன்றை வேணியார்." "வேரியார் மலர்க்கொன்றை வேணியார்.', 'கொன்றை: வார் சடையார் தொண்டர்." என்று சேக்கிழாரும், "கண்ணிகார்நறுங் கொன்றை.” என்று பாரதம் பாடிய பெருந்தேவனாரும், கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த், தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்." (அகநானூறு கடவுள் வாழ்த்து) என்று அதே புலவரும் பாடியருளியவற்றைக் காண்க. • ' '.
அடுத்து உள்ள 111-ஆம் பாடலின் கருத்து வருமாறு: -
தம்மைச் சூழ்ந்துவரும் அடியவர்கள் வாழ்த்துக்களைக்
கூற, மூன்று புரிகளைப் பெற்ற பூணுாலை அணிந்த மார்பைப் பெற்றவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் முப்பத்திரண்டு தருமங்களைப் புரிந்தருளுபவளாகிய பெரிய நாயகி
தன்னுடைய அழகிய கொங்கைகளிலிருந்து கறந்து ஒரு பொற்கிண்ணத்தில் வைத்துச் சிவஞானத்தைக் குழைத்து அளித்த பாலைக் குடித்தருளி வளர்ந்தவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவவதாரம் செய்தருளும், பெரிய பாக்கியத்தைப் பெற்றதென்று எண்ணி இந்தப் பூமண்டலம் முழுவதும் புகழும் சிறந்தபுகழைப் பெற்றதும், கழுமலம் என்ற பெயரைக் கொண்டதும் ஆகிய சீகாழியாகும் அழகிய சிவத்தலத்திற்குப் போய்ச் சேர்ந்தார். பாடல் வ்ருமாறு: