தடுத்தாட்கொண்ட புராணம் 15,
அழகு முதலிய குணங்களால்; ஒருமை பன்மை மயக்கம். அன்பு-அன்போடு. நேர்ந்தான்-தன்னுடைய புதல்வியைச் சுந்தரமூர்த்திக்குத் திருமணம் புரிந்து கொடுக்கச் சம்மதித். தான். .
பின்பு உள்ள 9-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அந்தச் சட்ங்கவி சிவாசாரியன் தன்னுடைய புதல்வியைச் சுந்தரமூர்த்திக்குத் திருமணம் செய்து கொடுக் கச் சம்மதித்துக் கூறிய வார்த்தைகளைக் கேட்டவர்கள் வள்ளலாகிய சுந்தரமூர்த்தியைப் பெற்ற தந்தையார் அன்னையார் ஆ கி ய வ ர் க ளி ட ம் போய்க். கூறிய பிறகு, பெருகியுள்ள தங்களுடைய உள்ளங் களில் உண்டானதாகிய ஒரு மகிழ்ச்சியை அடைந்து திருமணமாகிய மங்கல காரியத்தை மகிழ்ச்சியை அடைந்து கூறி, அரசர்களுடைய செல்வ நிலைக்கு ஏற்றபடி ஒரு முகூர்த்தத்தைக் குறிப்பிட்டு அந்தத் திருமணநாளைத் தெரிவிக்கும் ஒலையைச் சடங்கவி சிவாசாரியனும் அவனு. டைய மனைவியும் ஒர் ஆள் மூலம் அனுப்பினார்கள்.”
பாடல் வருமாறு: -
மற்றவன் இசைந்த வார்த்தை
கேட்டவர் வள்ளல் தன்னைப் பெற்றவர் தம்பால் சென்று
சொன்னபின் பெருகு சிங்தை உற்றதோர் மகிழ்ச்சி எய்தி
மணவினை உவந்து சாற்றிக் கொற்றவர் திருவுக் கேற்பக் -
குறித்துநாள் ஓலை விட்டார்.’’ மற்று: அசைநிலை. அவன்-அந்தச் சடங்கவி சிவாசா ரியன். இசைந்த-தன்னுடைய புதல்வியைச் சுந்தரமூர்த்திக் குத் திருமணம் செய்து கொடுக்கச் சம்மதித்துக் கூறிய.