தடுத்தாட்கொண்ட புராணம் 281
புறந்தருவார் போற்றிசைப்பப் புரிமுந்நூல் அணி . . - 山}T扩L星官 அறம்பயந்தாள் திருமுலைப்பால் அமுதுண்டு
. . . வளர்ந்தவர்தாம் பிறந்தருளும் பெரும்பேறு பெற்றதென முற்றுலகில்
சிறந்தபுகழ்க் கழுமலமாம் திருப்பதியைச் -
சென்றணைந்தார்.:
புறந்தருவார்-தம்மைச் சூழ்ந்து வரும் அடியவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். போற்று-வாழ்த்துக்களை: ஒருமை பன்மை மயக்கம். இசைப்ப-கூறிப் பாராட்ட ப்: சந்தி. புரி முந்நூல்-மூன்றுப் புரிகளைக் கொண்ட பூணுரலை; புரி: ஒருமை பன்மை மயக்கம். அணி-அணிந்த, மார்பர்மார்பை உடையவராகிய சுந்தர மூர்த்தி நாயனார். அறம்முப்பத்திரண்டு தருமங்களை ஒருமை பன்மை மயக்கம். அவை இன்ன என்பதை வேறோர் இடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. பயந்தாள்-புரிந்தருளியவளாகிய பெரிய நாயகி அம்மை. திரு.அழகிய முலைப்பால்-தன்னு டைய கொங்கைகளிலிருந்து கறந்து ஒரு பொற் கிண்ணத்தில் வைத்துச் சிவஞானத்தைக் குழைத்து வழங்கியருளிய பாவை. முலை: ஒருமை பன்மை மயக்கம். அமுது உண்டு. அமுதத்தைப் போலக் குடித்து. வளர்ந்தவர்தாம்-வளர்ந்த வராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். தாம்: அசை நிலை. பிறந்தருளும்-திருவவதார்ம் புரிந்தருளும். பெரும்.பெரிய. பேறு-பாக்கியத்தை. பெற்றது எண்-பெற்று விளங்குவது என்று எண்ணி என: இடைக்குறை. முற்றுலகில் -இந்த உலகம் முழுவதும். சிறந்த-சிறப்பாக அமைந்த, புகழ்-புகழைப் பெற்ற. க், சந்தி.கழுமலம் ஆம்-கழுமலமாகும் சீகாழி என்னும். திரு-அழகிய; செல்வங்கள் வாழும் எனலும் ஆம்; திணை மயக்கம். ப்: சந்தி. பதியை-சிவத்தலத்திற்கு: உருபு மயக்கம், ச்: சந்தி. சென்று-எழுந்தருளி. அணைந்தார். அந்த நாயனார் போய்ச் சேர்ந்தார்.