பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 233

போனகம்முன் நுகர்ந்தனையே.', 'புண்டமுது செய்ததுமை நங்கைஅருள் மேவுசிவ ஞானம்', "முப்பத் திரண்டறமும் செய்தாள் முதிராத, செப்பொத்த கொங்கைத் திருதுதலிஅப்பன், அருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத். திரளாகி முன்னின்ற செம்மல்.’’ என்று நம்பியாண்ட்ர். தம்பி பாடியருளியவற்றையும் காண்க.

பின்பு உள்ள 112-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

'ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவவதாரம் செய்தருளிய பெருமையைப் பெற்றி புகலியாகிய சீகாழியை உள்ளுக்குள்ளும் அடியேன் அடியேனுடைய கால்களால் மிதிக்க மாட்டேன் என்று சுந்தர மூர்த்தி நாயனார் எண்ணிச் சீகாழியின் எல்லைப் புறத்தில் நின்றவாறே தரையில் விழுந்து பிரமபுரீசன்ரப் பணிந்து வள்ளலாராகிய அந்த நாயனார். வலமாக வரும் சமயத்தில் மங்கையாகிய திருநிலை நாயகியைத் தன்னுடைய வாமபாகத்தில் எழுந்தருளச் செய்தவனும், திரும்ாலாகிய இடபவாகனத்தை ஒட்டுபவனுமாகிய பிரமபுரீசன் அந்த நாயனாருக்கு எதிரில் தன்னுடைய காட்சியை வழங்கிய்ருளல் :பாடல் வருமாறு:

பிள்ளையார் திருஅவதாரம்செய்த பெரும்புகலி,

உள்ளும்கான் மிதியேன் என்றுரெல்லைப்

- புறம்வண்ங்கி வள்ளலார் வலமாக வரும்பொழுதின் மங்கைஇட்ம், கொள்ளுமால் விடையானும் எதிர்காட்சி

கொடுத்தருள: இந்தப் பாடல் குள்கம். பிள்ளையர்-ஆளுட்ைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயன்ர். திரு அவதாரம் செய்த-திருவவதார்ம் செய்தருளிய பெரும்" பெருமையைப் பெற்ற புகலி-புகலியாகிய சீகாழிக்கு”. உள்ளும்-உட்புறத்திலும். நான்-அடியேன். மி தியே ன், ஆடியேனுடைய அடிகளால் மிதிக்க மாட்டேன். என்று