234 பெரிய புராண விளக்கம்-2
-ன்ன எண்ணி. ஊர்-அந்தச் சீகாழியினுடைய. எல்லை. எல்லையின். புறம்-வெளியில் இருந்தவாறே. வணங்கி-பிரம புரீசரைப் பணிந்துவிட்டு. வள்ளலார்-வள்ளலாராகிய சுந்தர மூர்த்தி நாயனார். வலமாக வரும்-சீகாழியை வலங்: கொண்டு வரும். பொழுதின்-சமயத்தில். மங்கை-திருநிலை ,
நாயகியாகிய மங்கையை இடம்-தன்னுடைய வாம பாகத்தில் கொள்ளும்-வைத்துக் கொள்ளும். மால்-திரு மாலாகிய. விடையானும் - இடபவாகனத்தை ஒட்டு பவனாகிய தோனியப்பனும். எதிர்-அந்த நாயனாருக்கு எதிரில். காட்சி-தன்னுடைய காட்சியை. கொடுத்தருளவழங்கியருள்.
திருமாலாகிய இடப வாகனம்: 'ஏறுமால்.”, “பாயும் மால்விடை மேலொரு பாகனே', என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், "செங்கண்மால் வி ைட ஏ றி ய செல்வனார்.', 'போரரவ மால்விடை யொன்றுார்தி யானை.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், "தடம் , மதில்கள் அவைமூன்றும் தழலெரித்த அந்நாளில், இட்ப மதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோர். என்று மாணிக்கவாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.
பிறகு வரும் 113-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:
தோனியப்பர் தம்முடைய காட்சியை வழங்கியருள, மிகுதியாக உண்டாகிய பெரிய பக்தியோடு வன்றொண்ட ராகிய சுந்தரமூர்த்தி நாயனார் நின்று கொண்டிருந்தவர். தரையில் விழுந்து அந்தத் தோனியப்பரை வண்ங்கிவிட்டு, 'தெளிவான அலைகளை வீசும் சமுத்திரத்தின்மேல் பிரளய காலத்தில் ஆழ்ந்துவிடாமல் மிதந்த திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியுள்ள தோணியப்பரை அடியேன் கயிலாச மல்ையில் எழுந்தருளியுள்ள வண்ணம் தரிசித்து மகிழ்ச்சியைக் கொண்டேன்' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு, உரிய பண்ணும் இனிய சங்கீதமும் அமைந்த திருப்பதிகம் ஒன்றை அந்த நாயனார் பாடியருளினார். பாடல் வருமாறு: