தடுத்தாட்கொண்ட புராணம் 23莎
. மண்டியபே ரன்பினால் வன்றொண்டர் கின்றி
றைஞ்சி: தெண்டிரைவே லையில்மிதந்த திருத்தோணி,
- - புரத்தாரைக் கண்டுகொண்டேன் கயிலையினில் வீற்:றிருந்த
LItạ-” என்று: பண்டரும் இன் னிசையின்ற திருப்பதிகம்
- பாடினார்.”
மண்டிய-தோனியப்பர் தம்முடைய காட்சியை வழங்கி யகுள மிகுதியாக உண்டாகிய, பேர்-பெரிய அன்பினால்பக்தியோடு; உருபு மயக்கம். வன்றொண்டர்-வன்றொண்ட ராகிய சுந்தர் மூர்த்தி நாயனார். நின்று-நின்று கொண். டிருந்தவர்; வினையாலணையும் பெயர். இறைஞ்சி-அந்தத் தோனியப்பரை வணங்கிவிட்டு, தெண்-தெளிவான, திரைஅலைகளை வீசும்; ஒருமை பன்மை மயக்கம். வேலையில்சமுத்திரத்தின்மேல் உருபு மயக்கம். மிதந்த-பிரளய காலத்தில் ஆழ்ந்து விடாமல் மிதந்த. திரு-அழகிய, த், சந்தி, தோணிபுரத்தாரை-சீகாழியில் உள்ள கட்டுமலையில் ஒரு. தோணியில் எழுந்தருளியிருக்கும் தோணியப்பரை. க், சந்தி. கயிலையினில்-கயிலாச மலையில் வீற்றிருந்த-அமர்ந்தருளி, யிருந்த படி-வண்ணம். கண்டு-அடியேன் தரிசித்து. கொண்டேன்-ஆனந்தத்தைப் பெற்றேன். என்று-என்று. திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. பண்-உரிய பண். தரும்-அமைந்திருக்கும். இன்-இனிய சொற்சுவை, பொருட் சுவை பொருந்திய இசை-சங்கீதம். பயின்ற்-அமைந்த. திருப்பதிகம்-ஒரு திருப்பதிகத்தை. பா டி னா ர்-அந்த், நாயனார் பாடியருளினார்.
அவ்வாறு அவர் பாடியருளிய திருப்பதிகம் தக்கேசிப் பண் அமைந்தது. அதில் வரும் ஒரு பாசுரம் வருமாறு:
' சாதலும் பிறத்தலும் தவிர்த்தெனை வகுத்துத்
தன்அருள் தந்தஎம் தலைவனை மலையின்