பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 237°

சுற்றிய சுற்றமும் துணைஎன்று கருதேன்

துணைஎன்று நான்தொழப் பட்டஒண் சுடரை முத்தியும் ஞானமும் வானவர் அறியர்

முறைமுறை பலபல நெறிகளும் காட்டிக் கற்பனை கற்பித்த கடவுளை அடியேன்

கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.” அடுத்து வரும் 114-ஆம் பாடலின் கருத்து வருமாறு: இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர் வண வேதம் என்னும் நான்கு வேதங்களும் ஓலமிடும் சிவ பெருமானாராகிய தோணியப்பர் தம்முடைய எதிரிலிருந்தும் எழுந்தருளி மறையச் சுந்தர மூர்த்தி நாயனார். அச்சத்தைக் கொண்டவராகி, அது பிறகு அகலவே, திருவாரூருக்கு எழுந்தருள விருப்பத்தை அடைந்து, பெருகி எழும் அலைகள் சுற்றி வீசும் முல்லை நிலத்தில் உள்ளதும் பெருமையைப் பெற்றதும் ஆகிய சீகாழி என்னும் சிவத்தலத்தில் தோணி யப்பரைப் பணிந்துவிட்டு அப்பால் எழுந்தருளித் திருக். கோலக்காவை அடைந்து சத்தபுரீசரைப் பணிந்துவிட்டுச் செந்தமிழ் மொழியில் அமைந்த மாலைகளாகிய பல திருப்பதிகங்களை அந்த நாயனார். பாடியருளி." பாடல். வருமாறு:

இருக்கோலம் இடும்பெருமான் எதிர்கின்றும்

எழுந்தருளி வெருக்கோளுற்றது.நீங்க ஆரூர்மேற் செல்

- . - விரும்பிப் பெருக்கோதம் சூழ்புறவப் பெரும்பதியை

. வணங்கிப்போய்த் திருக்கோலக் கரவணங்கிச் செந்தமிழ்மா

. லைகள் பாடி.."

இந்தப் பாடல் குளகம். இருக்கு-இருக்குவேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம்'என்னும் நான்கு வேதங்களும்; ஒருமை பன்மை மயக்கம். ஒலம் இடும்-ஐயா