338 பெரிய புராண விளக்கம்-2
என்று ஒலமிட்டு அழைக்கும். பெருமான்-சிவபெருமானா ராகிய தோணியப்பர்; ஒருமை பன்மை மயக்கம். எதிர் நின்றும்-தம்முடைய எதிரிலிருந்தும். எழுந்தருள எழுந்தருளி மறைந்து போக. வெருக்கோள்-அச்சத்தைக் கொள்வதை, உற்று-அடைந்து அது-பிறகு அந்த அச்சம். நீங்க-தம்மை விட்டு அகல. ஆரூர்மேல்-திருவாரூருக்கு உருபு மயக்கம். செல-எழுந்தருள; இடைக்குறை, விரும்பி-சுந்தர மூர்த்தி நாயனார் விருப்பத்தை அடைந்து. ப்: சந்தி. பெருக்குபெருகி எழும். ஒதம்-அலைகள்: ஒருமை பன்மை மயக்கம். சூழ்-நீர் நிலைகளில் சுற்றி வீசும். புறவ-முல்லை நிலத்தில் விளங்கும். ப்: சந்தி. பெரும்-பெருமையைப் பெற்ற. பதியைசிவத்தலமாகிய சீகாழியில்; உருபு மயக்கம். வணங்கிதோனியப்பரைப் பணிந்துவிட்டு. தோனியப்பர்-சீகாழியில் உள்ள ஆலயத்தில் விளங்கும் கட்டுமலையில் ஒரு தோணியில் பெரிய நாயகியாரோடு எழுந்தருளியிருப்பவர். ப்: சந்தி. போய்-அப்பால் எழுந்தருளி. த், சந்தி. திருக்கோலக்காதிருக்கோலக்கா என்னும் சிவத்தல்த்தில். வணங்கி-சத்தபுரீசு வரரைப் பணிந்து விட்டு. ச் சந்தி. செந்தமிழ்-செந்தமிழ் மொழியில் அ ைம ந் த. மாலைகள்-மாலைகளாகிய பல திருப்பதிகங்களை. பாடி-அந்த நாயனார் பாடியருளி. - திருக்கோலக்கா: இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் சத்தபுரீசுவரர். அம்பிகை ஓசை கொடுத்த நாயகி. இது இக்காலத்தில் திருத்தாளம் உடையார் கோயில் என வழங்கும். இது சீகாழிக்கு அரை மைல் தூரத்தில் உள்ளது. சீகாழிக்கும் திருக்கோலக்காவுக் கும் இடையில் கழுமல வாய்க்கால் என்னும் கால்வாய் -ஒடுகிறது. இது திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்
பொற்றாளம் பெற்ற திருத்தலம்.
இதைப் பற்றிச் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:
" நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
ஞான சம்பந்த னுக்குல கவர்முன்