242 பெரிய புராண விளக்கம்-2
இடம் சிவத்தலங்கள்: ஒருமை பன்மை மயக்கம். பலபலவற்றிற்கும் அந்த நாயனார் எழுந்தருளி. வணங்கிஅந்தத் தலங்களில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் களைப் பணிந்துவிட்டு. ச்: சந்தி. கான்-காடு; நறுமணமும் ஆம். ஆர்க்கும்-வீசும். மலர்-செந் தாமரை மலர், வெண்டாமரை மலர், ஆம்பல் மலர், அல்லிமலர், நீலோற்பல மலர், குமுதமலர், பொற்றாமரை மலர் முதலிய மலர்கள் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். த், சந்தி. தடம்தடாகம். சூழ்-சுற்றியிருக்கும். காவிரியின்-காவிரி ஆற்றி னுடைய. கரை-கரையை. அணைந்தார்-அந்த நாயனார் அடைந்தார். f
திருப்புன்கூர்: இது சோழநாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே. கோயில் கொண்டிருப்பவர் சிவலோக நாதர். அம்பிகை சொக்க நாய்கி அம்மை. இது வைத்தீசுவரன் கோயிலிலிருந்து மேற்கில் இரண்டு மைல் தூரத்தில் உள்ளது. திருநாளைப் போவார் நாயனார் தம்மை நேராகத் தரிசனம் செய்து வணங்கும். பொருட்டுச் சிவலோக நாதர் தமக்கு முன்னால் அமர்ந்திருந்த நந்திதேவரைச் சிறிது விலகியிருக்குமாறு செய்தருளிய தலம் இது. "சற்றே விலகி யிரும்பிள்ளாய், சந்நிதான்ம் மறைக்குதாம்; நற்ற லம்புரி நம்முடையதிரு நாள்ைப் போவான் வந்திருக்கிறான்.' என்று நத்தனர்ர். சரித்திரக் கீர்த்தனையில் கோபாலகிருஷ்ண பாரதியார் பாடியதைக் காண்க. -
சுந்தர மூர்த்தி நாயனாரும் ஏயர்கோன் கலிக்க்ாம்
நாயனாரும் நண்பர்கள் ஆன பிறகு இருவருமர்க வந்து, வழிபட்ட தலம் இது. கலிக்கர்ம நாயனார் இந்தத் தலத்தில் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார். ஏயர்கோன் 'கலிக்காம நாயனாரின் பொருட்டுச் சிவலோக நர்தர் பன்னிரண்டு வேலிப்பரப்புள்ள நிலங்களை இரண்டு முறைகள் பெற்றுக்கொண்டு மழையில்லாமல் யாவரும் வருந்தியகால்த்தில் மழை பெய்யச் செய்தருளிய தலம் இது. இந்தச் செய்தி: