தடுத்தாட்கொண்ட புராணம் 247
பிரான்-தலைவனாகிய காளகண்டேசுவரனுடைய. அடிதிருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். பணிந்தார்-சுந்தர மூர்த்தி நாயனார் வணங்கினார்.
மயிலாடுதுறை: இது இக்காலத்தில் மாயூரம் என்று வழங்கும். இங்கே கோயில் கொண்டிருப்பவர் மாயூர நாதேசுவரர். இது காவிரியாற்றின் தென்கரையில் உள்ளது: அம்பிகையின் திருநாமங்கள் அபயாம்பிகை, அஞ்சல் நாயகி என்பவை. அபயாம்பிகை மயிலாக வடிவம் எடுத்து மாயூரி நாதேசுவரரை வழிபட்ட தலம் இது. இந்தத் தலத்தில் ஐப்பசி மாதத்தில் காவிரியாற்றில் நீராடுவதால் சிறந்த பயனைப் பெறலாம். இதைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு: * - - - * -
வெஞ்சி னக்கடும் காலன் விரைகிலான் அஞ்சிறப்பும் பிறப்பும் அறுக்கலாம் மஞ்சன் மாமயிலாடு துறைஉறை அஞ்ச வாள்உமை பங்கன் அருளிலே.' இந்தத் தலத்தைப் பற்றித் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தக்கராகம், சாதாரி என்னும் பண்களில் திருப் பதிகங்களைப் பாடியுள்ளார். அவற்றுள் சாதாரிப் பண்ணில் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு:
கடந்திகழ் கருங்களிறுரித்து மையும்
அஞ்சமிக நோக்கரியராய்
விடந்திகழும் மூவிலைநல் வேலுடைய வேதியர் விரும்புமிடமாம் -
தொடர்ந்தொளிர் கிடந்ததொரு -
சோதிமிகு தொண்டைஎழில் கொண்ட துவர்வாய்
மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக
நாறுமயி லாடுதுறையே."
இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: