248 பெரிய புராண விளக்கம்-2
' கொள்ளும் காதன்மை பெய்துறும் கோல்வளை
உள்ளம் உள்கி உரைக்கும் திருப் பெயர் வள்ளல் மாமயி லாடு துறையுறை வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே. திரு அம்பர் மாகாளம்: இந்தத் தலம் இந்தக் காலத்தில் கோயில் திருமாகாளம் என வழங்கும். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் காளகண்டேசுவரர், மாகாள நாதர் என்பவை. அம்பிகையின் திருநாமங்கள் பட்ச்நாயகி, பய கூடிய நாயகி என்பவை. தீர்த்தம் மாகாள தீர்த்தம். இது அம்பர் என்னும் சிவத்தலத்துக்கு மேற்கில் முக்கால் மைல் தூரத்தில் உள்ளது. அம்பரிலிருந்து அம்பர் மாகாளத்துக்கு வரும் வழியில் சோமாசி மாற நாயனார் வேள்வி புரிந்த மண்டபம் உள்ளது. வேள்வித் திருவிழா வைகாசி மாதத்தில் ஒவ்வோராண்டும் நன்ட பெறு: கிறது. அம்பன், அம்பாசுரன் என்னும் அரக்கர்களைச் சங்காரம் செய்ததன்ால் உண்டாகிய பாவம் போகும் பொருட்டுக் காளி வழிபட்ட தலம் இது. காளி கோயில் ஆலயத்துக்கு வெளிப் பிராகாரத்தில் தென் பக்கத்தில் விளங்குகிறது. மகாகாள் முனிவரும் வழிபட்ட தலம்.இது. இதைப்பற்றிய ஒரு பாசுரம் வருமாறு:
பழகமா மலர்பறித் திண்டைகொண்
டிறைஞ்சுவார். பாற்செறிந்த குழகனார் குணம்புகழ்ந்தேத்துவார்
அவர்பலர் கூடநின்ற - கழகனார் கரியுரித்தாடுகங் காளர்நம் காளி ஏத்தும் அழகனார் அரிவையோ டிருப்பிடம்
அம்பர்மா காளந் தானே." இந்தத் தலத்தைப் பற்றித் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் குறிஞ்சி, நட்டராகம், சாதாரி என்னும் பண்களில் திருப்பதிகங்களைப் பாடியருளி யிருக்கிறார். அவற்றுள் சாதாரிப் பண்ணில் அமைந்த மற்றொரு பாசுரம் வருமாறு:
- *