பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பெரிய புராண விளக்கம்-2

மின்-மின்னலைப் போல. ஆர்-ஒளியை நிரம்ப வீசும். செஞ்சடை-சிவந்த சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற்பெற்ற. அண்ணல்-தலைவராகிய அக்கினிசுவரர். விரும்பு-விரும்பிக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். திருப்புகலூரை-திருப்புகலூருக்கு உருபு மயக்கம். முன் ஆகசுந்தர மூர்த்தி நாயனார் எழுந்தருளி முன்பு விருப்பம் உண்டாக, பணிந்து-அக்கினீசுவரரை வணங்கி, ஏத்திதுதித்து. முதல்வன்தன்-எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவனாகிய அக்கினிசுவரனுடையதன் அசைநிலை. அருள்திருவருளை. நினைந்து-தியானம் செய்து. பொன்-தங்கத், தால். ஆரும்-அமைந்திருக்கும். உத்தரியம்-மே லா ைட. யையும் அங்க, வஸ்திரத்தையும். புரி-மூன்று புரிகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். முந்நூல்-பூனூலையும். அணி-அணிந்து கொண்டிருந்த மார்பர்-மார் ைபு ப் பெற்றவரும். தென்-செந்தமிழ்நாட்டில் தெற்கில் விளங்கும். நாவலூர்-திருநாவலூரை. ஆளி-ஆட்சி புரிபவரும் ஆகிய சுந்தரமூர்த்தி நாயனார். திருவாரூர்-வன்மீக நாதருடைய ஆலயம் புகழ்பெற்று விள்ங்கும் திருவாரூருக்கு: சென்றுஎழுந்தருளி அணைந்தார்-அந்தத் தலத்தை அடைந்தார்.

மின்னார் செஞ்சடை: 'மின்னிலங்கு சடையான்.", 'மின்னிற் பொலிசடையான்.", மின்னலிலும் செஞ்சடை யான்.', மின்னார் சடை.', மின் திகழ் செஞ்சடையான்.", 'மின்னியல் செஞ்சட்ை.', மின்நேர் சடையாய்." மின்னேர் சடைகள் உடையான்.', மின்தாங்கு செஞ்சடைஎம் விகிர்தர். 'மின்னுலாவிய சடையினர்.',. 'மின்னை யன்னசடை.', மின்னியல் செஞ்சடை வெண் பிறையன்.', மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்.', மின்னை விரிபுன் சடை.', மின்னியலும் சடை தாழ.' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், மின்திகழ் சடை.', மின்புரிந்த சடை.", 'மின்னும் ஒப்பர் விரி சடை.', மின்னியலும் வார்சடை எம்பெருமான்." என்று. திருநாவுக்கரசு நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க.