தடுத்தாட்கொண்ட புராணம் 17
'மங்கலம் பொலியச் செய்த
மணவினை ஒலை ஏக்தி அங்கயற் கண்ணி னாரும்
ஆடவர் பலரும் ஈண்டிக் கொங்கலர் சோலை மூதூர்
குறுகினார்; எதிரே வந்து பங்கய வதன்ரி மாரும்
மைந்தரும் பணிந்து கொண்டார்.' மங்கலம் பொலிய-மங்கலம் விளங்கும் வண்ணம். ச்: சந்தி. செய்த-புரிந்த மண-திருமணமாகிய, வினை. சடங்கை அறிவிக்கும். ஒலை-ஒலையை ஏந்தி-தங்க ளுடைய கைககளில் எடுத்துக் கொண்டு. அம்-அழகிய. கயல்-கயல்மீன்களைப் போன்று விளங்கும்; ஒருமை பன்மை மயக்கம். கண்ணினாரும்-கண்களைப்பெற்ற பெண்மணி களும்: ஒருமை பன்மை மயக்கம். கண்: ஒருமை பன்மை மயக்கம். ஆடவர்-ஆண்மக்கள் ஒருமை பன்மை மயக்கம். பலரும்-பல பேர்களும்.சண்டி-சுட்டமாகக் கூடிக் கொண்டு. க்: சந்தி. கொங்கு-தேன்; மகரந்தப் பொடி எனலும் ஆம்: 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி. என்று குறுந்தொகையில் வருவதைக் காண்க. அலர்-மலர்கள் மலர்ந்த பல வகை மரங்கள் வளர்ந்து நிற்கும். சோலைபொழில் சூழ்ந்த, அந்த மரங்களாவன: மகிழமரம், மாமரம், வாகை மரம், வில்வ மரம், வேங்கை மரம், விளா மரம், பூவரச மரம், பவளமல்லிகை மரம், வாத நாரா யண மரம், வேப்ப மரம் முதலியவை. மூதூர்-பழைய ஊரா கிய புத்துரை. குறுகினார்.அந்தப் பெண்மணிகளும் ஆட வர்களும் அடைந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். எதிர்அவர்களுக்கு எதிரில். ஏ: அசைநிலை வந்து-அவர்களை வரவேற்பதற்காக வந்து பங்கய-செந்தாமரை மலர்களைப் போன்ற அழகைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். வதணி
2- !_uس-GlLI