பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 25E.

திருப்புகலூர், இது சோழநாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் அக்கினிசுவரர், கோணப் பிரான் என்பவை. அம்பிகை கருந்தாழ் குழலியம்மை. தீர்த்தம் அக்கினி தீர்த்தம். தவ. விருட்சம் புன்னைமரம். இது நன்னிலத்திலிருந்து கிழக்கில். தான்கு மைல் தூரத்தில் உள்ளது. அக்கினி வழிபட்ட தலம். இது. ஆலயத்துக்குத் தென்பக்கத்தைத் தவிர் மற்றப் பக்கங்களில் கருங்கல்லினால், கட்டப் பெற்ற அகழி இருக். கிறது. கோனப் பிரானாகிய சிவலிங்கத்தின் திருவுருவம், சற்றுச் சாய்ந்திருக்கிறது, சந்திர சேகரரின் சந்நிதிக்கு. முன்னால் அக்கினி பகவானுடைய திருவுருவம் இருக்கிறது. திருநாவுக்கரசு நாயனார் வழிபட்டு முக்தியை அடைந்த, தலம் இது. ஆலயத்தில் வாதாபி கணபதியின் திருவுருவம் உள்ளது. அதற்குப் பக்கத்தில் திருநாவுக்கரசு நாயனாருடைய திருவுருவம் உள்ளது. திருப்புகலூர் வர்த்தமானிச்சரம் என்ற சந்நிதி இந்த ஆலயத்துக்குள் இருக்கிறது: அக்கினி சுவரருக்குப் பல வகையான மலர் மாவைகளைக் கட்டிக் கொடுக்கும் திருத்தொண்டைப் புரிந்து வந்த முருக நாயன்ா ருடைய திருவவதாரத் தலம். இது. சுந்தர மூர்த்தி நாயனார். பள்ளி கொண்டிருந்த போது தம்முடைய தலைக்கு உயரமாக. வைத்துக் கொண்டிருந்த செங்கற்கள் யாவும் பொற் கற்க, ாைக மாறியிருப்பதைப் பார்த்து ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளினார், கொல்லிப் பண்ணில் அமைந்த அந்தத் திருப்பதிகத்தில் வரும் முதற் பாசுரம் வருமாறு:

தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும்

சார்வினும்தொண்டர்த் தருகிலாம் பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் . இம்மை யேதரும் சோறும் கூறையும்

ஏத்து லாம்இடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே. '