பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத் தாட்கொண்ட புராணம் 253;

பிறகு வரும் 118-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

தேர் நிற்கும் நீண்ட தெருவைப் பெற்ற திருவாரூரில். வாழும் மக்களுக்கு, "திருப்தியை அடையாத விருப்பத்தோடு: நம்முடைய தொண்டனும் நம்பி ஆரூரனும் ஆகிய சுந்தர மூர்த்தி யாம் இந்தத் தலத்துக்கு வருமாறு அழைக்க வரு. கின்றான்; அவனை மகிழ்ச்சியை அடைந்து நீங்கள் எதிர் கொண்டு வரவேற்பீர்களாக” என்று கங்கையாற்றின் நீர் தங்கும் சடாபாரத்தைப் பெற்ற தம்முடைய தலையின்மேல். நிலவை வீசும் பிறைச் சந்திரனை அணிந்தவராகிய வன்மீக. நாதர் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு:. - - -

தேராரும் நெடுவிதித் திருவாரூர் வாழ்வார்க் காராத காதலின்கம் ஆரூரன் நாம்அழ்ைக்க வாராகின் றான்.அவன்ை மகிழ்ந்தெதிர்கொள்

. . . . . . . . . " o வீர்.” என்று ரோரும் சடைமுடிமேல் நிலவ்னிங்தார் அருள்

செய்தார்.

தேர்-ஆழித்தேர், 'ஆழித்தேர் வித்தகனை யான்கண்ட தாரூரே.’’ என வருதல் காண்க. ஆரும்-நிற்கும், ஒடும்' எனலும் ஆம். நெடு-நீளமான வீதி-தெருவைப் பெற்ற. திருவாரூர்-திருவாரூரில். வாழ்வார்க்கு-வாழும் மக்களுக்கு;

ஒருமை பன்மை மயக்கம். ஆராத-திருப்தியை அடிையாத. காதலின்-விருப்பத்தோடு. நம்-நம்முடைய தொண்டனாகிய, ஆரூரன்-நம்பியாரூரன் ஆகிய சுந்தர மூர்த்தி.நாம்:யாம். அழைக்க-நீ. திருவாரூருக்குவா என்று அழைக்க. வாரா நின்றான்-வருகின்றான்.அவனை அந்தச் சுந்தரமூர்த்தியை. மகிழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து. எதிர்கொள்வீர்-எதிர் கொண்டு வரவேற்பீர்களாக ஒரும்ை பன்மை மயக்கம். என்று-என. நீர்-கங்கை யாற்றின் புனல். ஆரும்-தங்கி யிருக்கும். சடை-சடாபாரத் தைக் கொண்ட முடிமேல்தம்முடைய தலையின்மேல். நிலவு-நிலாவை வீசும் பிறைச்