தடுத் தாட்கொண்ட புராணம் 261.
களாக என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, த்: சந்தி. திருத்தொண்டர்-திருவாரூரில் வாழும் திருத்தொண்டர்கள்: ஒருமை பன்மை மயக்கம். அது-அந்தச் செய்தியை. சாற்றிதம்மிடம் கூற; எச்சத்திரிபு. எம்பிரானார்-அடியேங்களு டைய தலைவனாராகிய வன்மீக நாதருடைய. அருள்தான். திருவருள் தான் அசை நிலை. இருந்த அடியேனுக்குத் திருவாய் மலர்ந்தருளிச் செய்திருந்த பரிசு-இயல்பு. இது ஆனால்-இது ஆக இருக்குமானால், நம்-நம்முடைய.. பிரானார் ஆவார்-தலைவராக விளங்குபவர். அவர்-அந்த வன்மீக நாதர். அன்றே-அல்லரோ திணை மயக்கம். எனும் என்று எண்ணும்; இடைக்குறை. நலத்தால்-நல்ல எண்ணத் தால். உம்பர்-தேவர்கள் வாழும்; ஒருமை பன்மை மயக்கம். நாடு-உலகமாகிய சுவர்க்க லோகமே. இழிந்தது-இறங்கி வந்தது. என-என்று விளக்கும் வண்ணம்; இடைக்குறை. எதிர்கொள்ள-தொண்டர்கள் தம்மை எதிர்கொண்டு வரவேற்க. உடன்-அந்தத் திருத்தொண்டர்களோடு. எழுந் தார்-சுந்தர மூர்த்தி நாயனார் எழுந்து புறப்பட்டார். . அடுத்து உள்ள 120-ஆம் பாடலின் கருத்து வருமாறு: o - திருவாரூரில் உள்ள திருமாளிகைகளிலும் மண்டபங் களிலும் பக்கத்தில் பக்கத்தில் பெரிய துவசங்கள் நெருங்கி அசைய, நட்டு வைத்த கால்களின் மேல் நீண்ட தோரணங் களும், தழைகளைக் கொண்ட பாக்கு மரங்களும், மாவிலை களைக் கட்டிய மாலைகளும், நீண்ட இலைக்ளைப் பெற்ற வாழை மரங்களும், நீர் நிரம்பிய பொன்னாற் செய்யப் பெற்ற பூரண கும்பங்களும், வரிசையாக உள்ள நீண்ட மாணிக்கங்களைப் பதித்த திருவிளக்குகளும், உயரமாக உள்ள திருமாளிகைகளின் வாயில் ஒவ்வொன்றிலும் வரிச்ை யாகத் தொண்டர்கள் வைத்தார்கள். பாடல் வருமாறு: மாளிகைகள் மண்டபங்கள் மருங்குபெருங்
கொடிகெருங்கத் தாளின் நெடுங் தோரணமும் தழைக்கமுகும்
குழைத்தொடையும்