தடுத்தாட்கொண்ட புராணம் 263
பொற்சுண்ணத்தையும், குளிர்ச்சியைப் பெற்ற முத்துக்களை யும், நவரத்தினங்களையும் பரப்பி வைத்து, மகரந்தப்பொடி உள்ள மலர்களைத் தொடுத்தல் அமைந்த மாலைகளையும், குளிர்ச்சியான பந்தல்களையும் அமைத்துத் திருவாரூரில் உள்ள தெருக்களில் நுட்பமான புழுதி அடங்கும் வண்ணம் பன்னீரை மிகுதியாகத் தொண்டர்கள் தெளித்து வைத்தார். கள். பாடல் வருமாறு:
சோதிமணி வேதிகைகள் தூங்றும் சாங் தணி,
- விேக் கோதில்பொரி பொற்சுண்ணம் குளிர்தரள -
- - - மணிபரப்பித் தாதிவர்பூந் தொடைமாலைத் தண்பந்தர் -
- - களும் சமைத்து வீதிகள்துண் துகள் அடங்க விரைப்பனிநீர்
மிகத்தெளித்தார். ' சோதி-ஒளி வெள்ளத்தை வீசும். மணி-மாணிக்கங் களைப் பதித்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். வேதிக்ைகள்-தி ரு வ ரூ ரி ல் உள்ள திருமாளிகைகளில் இருக்கும் திண்ணைகளில், துர-தூய்மையாக உள்ள. நறும்நறுமணம் கமழும். சாந்து-அரைத்த சந்தனத்தை. அணிஅழகு பெற. நீவி-துடைத்து. க், சந்தி. கோது-ஒரு குற்றமும். இல்-இல்லாத கடைக்குறை. பொரி-நெற் பொரிகளையும்: ஒருமை பன்மை மயக்கம். பொற் சுண்ணம்-பெண்மணிகள் உரலில் இடித்துப் பண்ணிய பொற் சுண்ணத்தையும்: "அம்மானைப்பாடி ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.', 'செம்பொன் செய சுண்ணம் இடித்தும் நாமே.”, 'ஏய்ந்த பொற் சுண்ணம் இடித்தும் நாமே.”, “பாடிப்பொற். சுண்ணம் இடித்தும் நாமே.”, “முக்கணப்பற் காடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே.', "மகிழ்ந்துபொற் சுண்ணம் இடித்தும் நாமே.”, “ஆடக மாமலை அன்ன கோவுக் காடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.”, “பாடிப் பாடி ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.”, “தில்லை வாணனுக்கே