264. பெரிய புராண விளக்கம்-2
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.', 'அத்தன் கருணையொ டாடஆட ஆடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே.”, “அம்பலத் தாடினானுக் காடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.”, “மடந்தை நல்லீர் பாடிப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே.”, மங்கை நல்லீர் பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே.”, 'கொங்கை பொங்கப்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே., 'பானற் றடங் கண் மடந்தைநல்லீர் பாடிப்பொற் சுண்ணம் இடித்தும்
நாமே.”, “செம்பொன்செய் சுண் ண ம் இடித்தும் நர்மே.”, “நஞ்சுண்டல் பாடிப் பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே.”, “நாதற்குச் சுண்ணம்.இடித்தும் நாமே.”, "ஈசற்குச் சுண்ணம் இடித்தும் நாமே.”, 'ஆதியும் *
அந்தமும் ஆயினாருக் காடப்பொற் சுண்ணம் இடித்தும் நாம்ே.” என்று திருவாசகத்தில் வருவனவற்றைக் காண்க. குளிர் - குளிர்ந்த தரள முத்துக்களையும்; ஒருமை பன்ன்ம மயக்கம். மணி-நவரத்தினங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: மாணிக்கம், பவளம், புருடராகம், பதுமராகம், கோமேதகம், வஜ்ரம், வயிடூரியம், முத்து, மரகதக்கல் என்பவை. பரப்பிப்பரப்பி வைத்து. த், சந்தி. தாது.மகரந்தப் பொடி இவர்-உள்ள பூ-மலர்களை: ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. தொடை-தொடுத்தலைப் பெற்ற மாலை-மாலைகளையும்; ஒருமை பன்மை மயக்கம். த் சந்தி. தண்-குளிர்ச்சியைக் கொண்ட பந்தர்களும்: தண்ணிர்ப்பந்தல்களையும். சமைத்து-அம்ைத்து வைத்து. வீதிகள்-தெருக்களில் உள்ள. நுண்-நுட்பமான துகள்-புழுதி. அடங்க-அடங்கும் வண்ணம். விரை-நறுமணம் கமழும். ப்; சந்தி. பனி நீர்-பன்னீரை. மிக-மிகுதியாக. த், சந்தி. தெளித்தார் தொண்டர்கள் தெளித்து வைத்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.
அடுத்து வரும் 12-ஆம் பாடலின் கருத்து வருமாறு: திருவாரூரில் வாழும் பெண்மணிகள் மங்கலமான இசைப் பாடல்களைப் பாடவும், மேகத்தைப் 'போல