தடுத் தாட்கொண்ட புராணம் 265.
முழங்கும் வாத்தியங்கள் முழக்கத்தை எழுப்பவும், சிவந்த கயல் மீன்களைப் போன்ற கண்களைப் பெற்றவர்களும், திருமேனி முழுதும் அணிகலன்களை அணிந்த நடனப் பெண் மணிகள் ஒவ்வொரு திண்ணையிலும் நடனத்தைப் புரியவும், அடியேங்களுடைய தலைவனாகிய வன்மீக நாதன் கோயில் கொண்டருளியிருக்கும் திருவாரூர் நகரத்தில் வாழும் மக்கள் நம்பி யாரூரனாகிய சுந்தர மூர்த்தியை அந்த நகரத்துக்கு முன்னால் அழகு பொங்கும் திருமதிவினுடைய நீளமான அழகிய வாசலுக்கு வெளியில் சேர வந்து எதிர்கொண்டு வரவேற்றார்கள். பாடல் வருமாறு: -
மங்கலகீதம்பாட மழைநிகர்து ரியம்முழங்கச் செங்கயற்கண் முற்றிழையார் தெற்றிதொறும்
X- நடம்பயில கங்கள்பிரான் திருவாரூர் நகர்வாழ்வார்
நம்பியை முன் பொங்கெயில்ள்ே திருவாயிற் புறம் உறவங்
. - தெதிர்கொண்டார்: '
மங்கல-திருவாரூரில் வாழும் பெண்மணிகள் மங்கல மான. கீதம்-இசைப் பாடல்களை; ஒருமை பன்மை மயக்கம். பாட-பாடவும். மழைமேகத்தை நிகர்-ஒத்து முழங்கும். துர்ரியம்-நாகசுரம், ஒத்து, மத்தளம், கஞ்சதாளம், யாழ், வீணை, முரசு, சல்லரி, கரடிகை, பேரிகை, உடல், முகவீணை, தம்புரா, தபேலா, இடக்கை, தமருகம் முதலிய வாத்தியங்கள்; ஒருமை பன்மை மயக்கம். முழங்கமுழக்கத்தை எழுப்பவும். ச் சந்தி. செம்-சிவந்த. கயல்கயல் மீன்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். கண்கண்களையும்; ஒருமை பன்மை மயக்கம். முற்று-தங்களு, டைய திருமேனிகள் முழுதும். இழையார்-அணிகலன்களை அணிந்து நடனமாடும் பெண்மணிகள்: ஒருமை பன்மை மயக்கம். அந்த அணிகலன்களாவன: சுட்டி, கம்மல், வைர. மூக்குத்தி, மாட்டல், ஜிமிக்கிகள், அட்டிகை, வங்கி, காசு மாலை, முத்து மாலை, நவரத்தின மாலை, கைத்தங்கக்